எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் விருது வழங்கல்

சங்கராபுரம், ஜூன் 1 சங்கராபுரத்தில் இராஜேசுவரி -  நாராயணன் அறக்கட் டளை 29.5.2018 அன்று தொடங்கப் பட்டது. அவ்வறக்கட்டளை சார்பாக பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைப் பின்பற்றியும், பரப்பியும் சமுதாயப் பணி ஆற்றுகின்ற நம் கழகத் தோழர் களுக்கு வழங்கப்பட்டது.

இவ்விருது தியாக துருகத்தின் தந்தை, திமுக முன்னோடி மிசா பொன் இராமகிருட்டிணன் அவர்களுக்கும், ஓவிய இமயம் மு.கலைச்செழியன் அவர்கட்கும், திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினரும், திருக்கோவிலூர் நகரத் தலைவருமான தி.பாலன் அவர் கட்கும், சவுந்திரவல்லி பாளையம் மேனாள் தலைமையாசிரியரும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வரும், சிதம்பரத்தில் ஒரு முறை திராவிடர் கழக மகளிர் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவருமான ஜெயலட்சுமி கண்ணாயிரம் அவர் கட்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினர் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் முனைவர் பட்ட ஆய்வாளரும், சீரிய பகுத்தறிவாளரு மான ம.விசய் ஆனந்து ஆகிய அய்ந்து பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் விழுப்புரம் மண் டலத் தலைவர் க.மு.தாஸ், பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமிதாஸ், மண் டல இளைஞரணி பொறுப்பாளர் தம்பி பிரபாகரன், மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பெ.பாலசண்முகம், திருக் கோவிலூர் ஒன்றிய கழக தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், இரிசிவந் தியம் ஒன்றிய கழக செயலாளர் அர. சண்முகம், வடகரை தாழனூர் கிளைக் கழகத் தலைவர் மு.சேகர் உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner