எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மியான்மர் நாட்டு தென்ட கோன் நகரிலிருந்து பெரியார் சுயமரியாதை இயக்கத்தினைச் சார்ந்த நா.அப்பாவு மற்றும் எம்.ஜி.குமார் ஆகியோர் சென்னை - பெரியார் திடலுக்கு 8.3.2018 அன்று வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் பொழுது மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் நகரில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் கோட்ட திறப்பு விழா அழைப்பிதழை விழாக் குழுவின் தலைவர் நா.அப்பாவு தமிழர் தலைவ ரிடம் அளித்து நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டினார். மியான்மர் நாட்டு பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் (நிறுவிய ஆண்டு 1931) தலைவர் வீரா.முனுசாமி, தமிழர் தலைவருக்கு தம் கைப் பட எழுதிய கடிதத்தையும் உடன் கொண்டு வந்தனர்.

அக்கடிதத்தில் திருவள்ளு வர் கோட்ட திறப்பு விழா மலரில் இடம் பெற தமிழர் தலைவரிடம் ஒரு சிறப்புக் கட் டுரை வேண்டி எழுதியிருந்தார். மேலும் அக்கடிதத்தில், தமிழ் நாட்டில் முதன் முதலாக தந்தை பெரியார் ஏற்பாட்டில் 1949இல் நடைபெற்ற திருக்கு றள் மாநாட்டுச் செய்தியினை யும், படங்களையும் அனுப்பி வைத்திட கோரியிருந்தார்.

திருக்குறள் - வள்ளுவர் (பெரியார் களஞ்சியம் 37) நூலினை தமிழர் தலைவர் அவர்கள் வருகை தந்தோர் மூல மாக வீரா.முனு சாமி அவர்க ளுக்குக் கொடுத்து அனுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner