எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், மார்ச் 9 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 26.02.2018 அன்று மாலை 6.00 மணிக்கு சிதம்பரம் பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தமது உரையில், அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் வாழ்வும், தொண்டும் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்திய சமுக உயர்வினை எடுத்துக் காட்டியும்,

தமிழர் தலைவர் அவர்களின் பேருழைப்பையும், திராவிடர் மாணவர் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியும், மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்ட தோழர்களுக்கு பாராட் டையும் தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய மாவட்டத் தலை வர் பேராசிரியர் பூசி. இளங் கோவன், மாணவர் கழகத்தில் தாம் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண் டார். மேலும், உலக நாத்திக மாநாட்டினையொட்டி நடை பெற்ற ஆங்கில கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற அண்ணா பல்கலைக் கழக மாணவர் அ. இசையமுதுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் அ. சித்தார்த்தன், கழகச் சொற்பொழி வாளர் புவனகிரி யாழ். திலீபன், நகர அமைப்பாளர் செல்வநாய கம், மாவட்ட ப.க துணைத் தலைவர் முனைவர் ப. சந்திரன் மோகன், மாவட்ட ப.க அமைப் பாளர் ஆசிரியர் பூ. வே. அசோக் குமார், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கோ.நெடுமாறன், பெரியார் படிப்பக துணைத் தலைவர்  ஆறு. கலைச்செல்வன் ஆகியோர் மாணவர்களை பா ராட்டி கருத்துக்களை வழங்கி னார்கள்.

புதிய பொறுப்பாளர்கள்
சிதம்பரம் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம்

தலைவர் : க. கனிவண்ணன், செயலாளர்: உன்னிகிருட்டிணன், அமைப்பாளர் : ச.வீரமணி

அண்ணாமலைப் பல்கலைக் கழக திராவிடர் மாணவர் கழகம்

தலைவர் : மு.அறிவுமணி, செய லாளர் : அ. இசையமுது, அமைப் பாளர் : சி .ஆகாஸ், பொருளாளர் : ஆர். இராசேசு

அறந்தாங்கி எரிச்சி

அறந் தாங்கி கழக மாவட்டம் எரிச்சி யில் 25.02.2018 அன்று மாலை 6.00 மணிக்கு திராவிடர் மாணவர் கழகம் சார்பில் சந்திப்புக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மண்டலத் தலை வர் பெ. இராவணன் தலைமை யேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் மனிதநேய கருத்துக்களை எடுத்துக்கூறி உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர ணிச் செயலாளர் வீரையா, அறந் தாங்கி நகரச் செயலாளர் யோகராசு, துணைச் செயலாளர் சுப்ரமணியன், நெய்வத்தளி சதீசு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்று, திரா விடர் கழக மாநில அமைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் பெரும் பணி யினால் விளைந்த பயன்களையும்,

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் ஓய்வறியா உழைப் பினையும், நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வருவதையும் எடுத்துக் காட்டி சிறப்புரையாற்றினார்.

திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வின் ஆபத்தினை விளக்கி எரிச்சியில் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner