எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பொத்தனூர், பிப்.4 நாமக்கல் மாவட்டம். பொத் தனூர்  பெரியார் திடலில் 27.01.2018 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம்  எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில மாண வரணி கூட்டுச் செயலாளரும், தலைமைக்கழகப் பேச்சாளரு மான சே.மெ.மதிவதனி சிறப் புரையாற்றினார். அவரது உரையில்: தந்தை பெரியாரின் சமூகப் பணிகளையும், தமிழர் தலைவரின் தொண்டறப் பணி களையும் எடுத்துச் சொன்னார், பழைய குலக்கல்வி திட்டந் தான் மோடியின் புதிய கல் விக்கொள்கை, நீட் என்று  சிறப்பாக விளக்கிப் பேசினார்.

கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ தலைமை தாங்கினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், நாமக்கல் மாவட்ட தலைவர் அ.கு.குமார், மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி, பொத்தனூர் பகுத் தறிவாளர் கழக தலைவர் வீர.முருகன்,வேலூர் தலைவர் முத்து.கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்ன தாக ஈரோடு பெரியார் பிஞ் சுகள் ராவணன், எழிலன் ஆகியோர் நறுக்குகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தி பொது மக்களின் கை தட்டலைப் பெற்றனர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வெங்கரை மு.பழனியப்பன், வேலூர் நகர திராவிடர் கழக தலைவர் கே.எஸ்.அசேன், செயலாளர்,   ஆ.சுரேசு, மருத. அறிவாயுதம், வீரமணி, க, பழனிச்சாமி, ஏ.அன்புமணி, சந்திரசேகரன், சி.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி,. மாகார்த்திகேயன், ஏ.அன்ப ழகன், ஈ.அழகேசன், ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் செல்வன், பேராசிரியர் முத்து சரண், பள்ளிபாளையம் சீனி வாசன், இளைஞரணி சு.சேகர், கரூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து, கரூர் தோழர்கள், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக  கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பொத்தனூர் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ராஜசேகரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்துன. பொத்தனூர் முழுவதும் கழகக் கொடி கட் டப்பட்டிருந்தன. அனைவருக் கும் இரவு உணவு வழங்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner