எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி

பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் மனித நேய மருத்துவ தொண்டறப் பணிகள்

சென்னை, டிச. 6- சென்னை பெரியார் திட லில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் டாக்டர் எம்.இராதாகிருஷ் ணன் (கண் மருத்துவர்) இம்முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் மகளிர் நோய் இயல், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரக இயல் ஆகிய துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்தி ருந்த பொதுமக்களுக்கு இலவச மருத் துவ சேவைகளை வழங்கினர். இதில் கலந்து கொண்டு சிறப்பித்தோர் விபரம்:

போசிரியர் டாக்டர் எம்.இராதா கிருஷ்ணன் (மேனாள் இயக்குநர், அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை), டாக்டர் கே.அறிவாழி -(காது, மூக்கு, தொண்டை நிபுணர்), டாக்டர் சி.மீனாம் பாள் (ஒருங்கிணைப்பாளர், மகளிர் நோய்இயல் மற்றும் குழந்தைகள் நலம், பெரியார் மருத்துவமனை, சென்னை), டாக்டர் மித்ரா (பல் மருத்துவ நிபுணர்), நிலைய மருத்துவர் திருமதி தங்கம் தியாகராஜன், வாசன் அய்கேர் நிறுவ னத்தில் இருந்து ஆர்.ஜி.ஸ்டோன் ஆகி யோர் மருத்துவக் குழுமத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

திருச்சி

சுந்தர் நகரில் அமைந்துள்ள பெரி யார் மருத்துவமனையில் 2.12.2017 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவ சிகிச்சைகளை மேற் கொண்டனர். இம்மருத்துவ முகாமில் டாக்டர் முனவர் சுல்தானா, திருமதி யாமினி ஆகியோர் கலந்து கொண்ட 120 பயனாளர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கினர்.

திருவாரூர்

பெரியார் மருத்துவ மனையில் 2.12.2017 அன்று சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் வந்திருந்த 77 பயனாளர்களுக்கு டாக்டர் பஞ்சாட்சரம் அவர்கள் மருத் துவசேவையினை வழங்கினார்கள்.

திருவெறும்பூர்

பெரியார் மருத்துவமனையில் 3.12.2017 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை யொட்டி பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக்டர் சுகு மாரன், டாக்டர் சிவக்குமார், டாக்டர் தியாக ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வந்திருந்த 204 பயனாளர்களுக்கு இல வச மருத்துவ சிகிச்சையளித்தனர்.

சேலம்

தமிழர் தலைவரின் 85ஆவது பிறந்த நாளையொட்டி சேலம் மரகதம் மாரி யப்பன் மருத்துவமனையில் (பெரியார் மருத்துக்குழுமத்துடன் இணைந்தது) இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக் டர் ராமநாதன் மற்றும் டாக்டர் சந் திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு 22 நபர்களுக்கு சிகிச்சையளித்தனர்.

மேற்கண்ட இலவச மருத்துவ முகாம் கள் சென்னை, திருச்சி, திருவெறும்பூர், திருவாரூர் (சோழங்க நல்லூர்), சேலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பெரி யார் மருத்துக் குழுமத்தில் இணைந் துள்ள மருத்துவ மனைகளின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆவது பிறந்த நாளை யொட்டி நடை பெற்ற இம்முகாம்களில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து மருத்துவ வல்லு நர்களுக்கும் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் மருத்துவக் குழுமத்தை நிறுவி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை களை வழங்கி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் 100 ஆண்டு கடந்து வாழ வேண்டும் என்பதே நம் அனை வரின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.

- டாக்டர் ஆர்.கவுதமன்

இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner