எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, டிச.4 தூத் துக்குடியில் "உண்மை" வாசகர் வட்டம் தொடக்கம் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது.

25.11.2017 அன்று மாலை சரியாக 6 மணிக்கு விழா தொடங்கியது. உண்மை வாசகர் வட்டச் செயலாளர் ச.காசி அனைவரையும் வர வேற்றும் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றும் உரையாற்றினார்கள்.

சிறப்புரையாக, ‘குறள் வழிச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உலகத் திருக்குறள் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோ.அன் பழகன் உரையாற்றினார்.

அவர்தம் உரையில், திருக்குறள் ‘வீடு' பேறு என்ற ஒன்றினை ஏற்காது, வாழ்வ தற்கு அறம், பொருள், இன்ப மெனும் மூன்று உறுதிப் பொருளினை வலியுறுத்திக் கூறிய நூல் என்றார். எவர் எது சொன்னாலும் உண்மைப் பொருளை அறிந்து ஏற்றுக் கொள்வது; வாய் + மெய் பேசுவதே மனித வாழ்வு; மக்கள் சமூகம் ஏற்றுக்கொண்ட நற்செயல்களைச் செய்தால் சடை வளர்த்தல், நீட்டல் வேண்டாம் என்றார்.

எல்லா உயிர்களும் பிறப் பில் ஒன்றே என்பதும், அந் தணர் என்போர் அறஞ்செய் வோரே, பிற உயிர்களை வருத் துவோரல்லர் என்பதும் உண் டது செரிமானம் ஆனபின் உண்டால் உடலுக்கு மருந்தே வேண்டாமென்பதும், பிறர் செய்த உதவியை என்றும் மறவாதிருப்பதும், பெரியோர் அரிய செயல்களையும் செய்து முடிக்கக் கூடியவரென்பதை யும், வானிலிருந்து நீர்த்துளிகள் வீழவில்லையாயின் உலகே பசியால் செத்துவிடுமென்பதும், திருவள்ளுவரின் கருத்தாகு மென்றார். பாரதிதாசனார், அண்ணா, கண்ணதாசன், கலைஞர் ஆகியோர் தங்கள் இலக்கியங்களில் திருக்குறளை எடுத்தாண்டுச் சிறப்பித்துள் ளனர் என்று கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் திருக்குறளுக்காக மாநாடு கூட்டி அதனை மக்கள் இலக் கியமெனப் பறைசாற்றியவர் என்றார். பேச்சாளர்கள் கையா ளும் சொற்கள் கூட பிறரின் சொல் வென்றிடாதவாறு சொற் களைக் கொண்டு பேச வேண் டுமெனக் கூறியவர் திருவள் ளுவர் என்றார். திருவள்ளுவரின் பிறப்பையே கலைஞர் ‘தமிழ்ப் புத்தாண்டு' என அறிவித்தார். அதுவே தமிழரின் வரலாற்றுச் சான்றும் கூட என்றார். இன்பத் துப்பாலில் கூட ‘ஊடல்' போராக மாறாது உப்பைப் போல் ஊடி ஒன்று கூடிடும் உறவாக இருக்க வேண்டுமென் பதை மென்மையாக எடுத்துக் கூறுவது திருக்குறள் எனச் சிறப்பாக விளக்கிக் கூறினார்.

மாவட்டப் ப.க. தலைவர் ச.வெங்கட்ராமன் நன்றி கூறிடச் சரியாக குறித்தபடி இரவு 8 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் மு.முனி யசாமி முன்னிலை ஏற்றார். நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, செயலாளர் ச,இரா சேந்திரன், மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, இரா.பானுமதி, பொதுக்குழு உறுப் பினர் பெ.காலாடி, மாவட்ட கழக துணைத்தலைவர் பொ.செல்வராஜ், மாவட்ட ப.க. செயலாளர் மா.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் த.செல்வராசு உட்படத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner