எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாராபுரம், நவ.14 பெரியார் பெருந்தொண்டரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான தாராபுரம் ப.வடிவேல் (வயது 76) மற்றும் அவரது  இணையர் துளசியம்மாள் (வயது 70) ஆகியோரை விடுதலைச் சந்தா வசூல் நிமித்தமாக தாராபுரம் வந்த கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சந்தித்து  நலம் விசாரித்தார், சந்திப்பின் மகிழ்வாக பயனாடை அளித்து சிறப்பு
செய்தார்.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் ப.வடிவேல் தன்னுடைய விடுதலைச் சந்தா (ணிஞியி-கி 22622) காலக்கெடு முடிவடையாத நிலையிலும்  கொள்கை குன்றாத பேரார்வத்தோடு கழக அமைப்பாளரிடம்  ஓராண்டு விடுதலைச் சந்தா ரூ.1800/- வழங்கிச் சிறப்பித்தார். தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம் நகரச் செயலாளர் ப.மணி, கோவை மண்டல  இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர் (13.11.2017).



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner