எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, அக். 12- புதுச்சேரி மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.10.2017 அன்று மாலை 6 மணியளவில் பெரியார் படிப்பகத்தில் மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில், புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன் முன்னிலையில் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் வரவேற்புரையுடன் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரி யர் சி.இரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டனர். புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மண் டல தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், புதுவை மு.ந.நடராசன், பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரமேஷ், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள், இயக்க வளர்ச்சிக்காக பகுத்தறிவாளர் கழகம் செய்ய வேண்டிய திட்ட பணிகள், உறுப்பி னர் சேர்ப்பு, பள்ளி, கல்லூரிகளில் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பு வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எடுத்துக்கூறி கருத்துரை ஆற்றினர். இறுதி யாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்ட 6 முத்தான தீர்மானங்களை விளக்கி யும், கழக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு பணி பற்றியும், புதியதாக தெரிவு செய் யப்பட்டுள்ள பொறுப்பாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) மத்தியில் ஆளும் பாஜக அரசு மூலம் கொண்டு வரப்பட்டு சமூகநீதிக்கு சவக்குழி தோண்டி கிராமபுற ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண வர்களின் மருத்துவ கனவை புதைக்கும் "நீட்" தேர்வால் மனமுடைந்து, உயிர் நீத்த அரியலூர் மாணவி அனிதா அவர்களின் மறைவிற்கும், இந்து வெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட கர்நாடக பகுத்தறிவு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக் கத்தையும் தெரிவித்து கொள்கிறது.

2) மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறை வேற்றிய கர்நாடக மாநில அரசையும் அம் மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர் களையும் இக்கூட்டம் மிகவும் பாராட்டுகிறது. மேலும் அதே போன்று மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தினை புதுச்சேரியிலும், தமிழ கத்திலும் நிறைவேற்றிட வேண்டுமாய் இரு மாநில முதலமைச்சர்களையும் கேட்டுக் கொள் ளப்படுகிறது.

3) தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல் லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேச்சு போட்டிகளை நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.

4) வருகின்ற டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் 15 ஆயிரம் விடுதலை சந்தா வழங்கும் விழாவிற்கு பகுத்தறிவாளர் கழகம், பகுத்த றிவு ஆசிரியர் அணி சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் குறையாமல் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

5) வருகின்ற 2018 ஜனவரி 5,6,7 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் அதிகமான தோழர்களுடன் சென்று பங்கேற்பது என தீர்மானிக்கப்படு கிறது.

6) பகுத்தறிவாளர் கழகத்திற்கும், பகுத்த றிவு ஆசிரியரணிக்கும் அதிகமான உறுப்பி னர்களை சேர்ப்பது எனவும் 3 மாதத்திற்கு ஒரு முறை கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது எனவும் நீட், நவோதயா, புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை விளக்கி ஒரு நாள் கருத்தரங்கம் நடத்துவது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கலந்துரை யாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

1) புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார்.

2) புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் பா.குமரன்

3) புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன்

4) புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் துரை.முனுசாமி

5) புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் கி.வ.இராசன்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பொதுக்குழு உறுப்பினர் கே.கிருஷ்ண ராசு, டிஜிட்டல் லோ.பழனி, பெரியார் பெருந்தொண்டர்கள் காரை பெரியார்முரசு, பொ.தட்சிணாமூர்த்தி, கி.வ.இராசன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக புரவலர் இரா.சடகோபன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் சி.என்.பிள்ளை, துரை முனுசாமி, புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், வில்லியனூர் நகர கழக தலைவர் கு.உலக நாதன், இளைஞரணி கே.இராமன், ஏ.சிவக் குமார், ஜெ.ஜீவன்சார்வாகன், மகளிரணி தோழியர் பத்மா பிள்ளை, பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக பேராசிரியர் அழகிரி சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner