எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈரோடு, அக். 12- தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழகம் எங்கும் உற்சாகத்துடனும், பேரார்வத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

ஈரோடு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் முழு உருவ சிலைக்கு கழக அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழக தோழர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து  கனி மார்க் கெட், மணிக்கூண்டு, நேதாஜி சாலை, நகர காவல் நிலையம், பெரியார் வீதி வழியாக திராவிடர் கழகத் தோழர்கள் பெரும் வாழ்த்து முழக்கத்துடன் ஊர்வலமாக சென்று நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மகளிர் சார்பில் மாலை யிட்டு மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண் முகம் மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு பேராசிரியர் ப.காளி முத்து மாவட்ட அமைப்பாளர் கு.சண்முகம், மருத்துவர் ச.ராவணன், மருத்துவர் சக்திவேல், ஆ.மாரப்பனார், ப.சத்திய மூர்த்தி, ஈரோடு அறிவுக்கன்பன், பெரியார் வாசகர் வட்ட தலைவர் பிஎன்எம்.பெரியசாமி,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தை.காமராஜ், கொடுமுடி ஒன்றிய செய லாளர் கைலாசம், மாவட்ட துணைத்தலைவர் செ.பிரகாசன், மாவட்ட துணைச்செயலாளர் புல்லட் மா.மணிமாறன், திராவிட மணி, வீராசேட்டு, பொன்முகிலன், ப.செல்வராசன், வீரப்பன் சத்திரம் ஆறுமுகம் பெரியார் நூலக நூலகர் செந்தில் மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ப.தமிழ்ச்செல்வன், மாநகர இளைஞரணி தலைவர் ர.பார்த்திபன், மாநகர செயலாளர் த.தங்கராஜ், க.யுவராஜ்,கி.பிரபு, மகளிரணி மண்டல செயலா ளர் ராஜேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ம.கவிதா, கோபா.விஜய ராணி, ச.ஜெயராணி, விஜயலட்சுமிகைலாசம், மாலதி பெரிய சாமி, உஷா மன்றோ, நளாயினி என்ற சித்ரா, இவாஞ்சலின் பிலஸி, ஜீவரத்தினம், மாவட்ட மாணவரணி தலைவர் பெ.மதிவாணன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜா.டேவிட், அபிஷேக் ,பெரியார் பிஞ்சுகள் ச.ராவணன், ச.எழிலன், பொன்சாரா, த.இளமாறன், த.உதயநிதி, உஜெ.சாம்லீ, உஜெ.மகிழன், காவியன், பி.புகழ், கா.கயல்விழி, மற்றும் திமுக சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில் குமார், பிஎன்எம் நடேசன், நைல்ராஜா.மகளிரணி ர.வீரமணி, விடுதலை சிறுத் தைகள் கட்சி தோழர்கள் மண்டல செயலாளர் விடுதலை முத்து தலைமையிலும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்குமரன், கோவை து.கதிரவன் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த தோழர்களும் ஏராள மான பொதுமக்கள் மாணவ மாணவியர்களும் பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பெரியார் மன்ற வளாகத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் பெ.மதி வாணன் கழக கொடியேற்றினார்.

நிறைவாக கழக தோழர்கள் மற்றும் தோழமை இயக்க தோழர்கள் பத்திரிக்கையாளர்கள் பொது மக்கள் பலருக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் சிறப்பான அசைவ விருந்தினை மதியம் வழங்கி அனைவரின் பாராட்டுதல்களை பெற்று விழா எழுச்சியுடன் ஈரோட்டில் நிறைவுற்றது. மாவட்டத்தில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ம.கவிதா தலைமையிலும் கருங் கல் பாளையம் பகுதியில் மாலதிபெரியசாமி தலைமையிலும் வளையக்காரன்வீதி அய்யனாரப்பன் கோவில் பகுதியில் .கா.ஜீவரத்தினம் தலைமையிலும் மரப்பாலம் பகுதியில் ராஜேஸ் வரி தலைமையிலும் அய்யா படத்திற்கு மாலையிட்டு மரி யாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

குருவைரெட்டியூரில் கழக மண்டல தலைவர் ப.பிரகலா தன் தலைமையில் அய்யா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர் பகுத்தறிவாளர் கழக தலைவர் ந.கிருஷ்ண மூர்த்தி பக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி கணேசன் குறிச்சி கோவிந்தன் பூதப்பாடி க.மணிகண்டன் பென்ஜான்சன் கார்த்தி மணிமாறன் ரீதர் சதீஸ் திவிக சார்பில் மாவட்ட தலைவர் நாத்திகஜோதி வேல்முருகன் செல்வராஜ் உள்ளிட்ட பெரியார் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் மதியம் ஊர் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பாக தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

சிவகிரி

சிவகிரியில் மாவட்ட கழக அமைப்பாளர் கு.சண்முகம் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு நகர தலைவர் திராவிட மணி கழக கொடியேற்றினார் நகர செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிவகிரியில் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் தந்தை பெரியார் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம்

உலகத்தலைவர் பெரியார் அவர்களது 139ஆவது பிறந்த நாள் விழா தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் உடு மலை ஒன்றியப் பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

17.9.2017 அன்று அலங்கரிக்கப்பட்ட மினி வேனில் ஏழு அடி உயரமுள்ள பெரியார் படத்தை அலங்கரித்து வைத்து ஒலி பெருக்கியில் அய்யாவின் தத்துவப் பாடல்கள் முழங்க பெரும்பாலான தோழர்கள் இரு சக்கர வாகனத்தில் கொடிகளை கட்டிக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாக னத்தை பின் தொடர்ந்து ஊர்வலமாக சென்று பதினான்கு இடங்களில் கொடியேற்று விழாவை நடத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
கணியூர் ஆஸ்பத்திரி மேட்டில் தொடங்கிய ஊர்வலம் மடத்துக்குளம் ஒன்றியம், உடுமலை ஒன்றியம் முழுவதும் சிறப்பான ஊர்வலமாக நடைபெற்றது.

பொதுமக்கள் ஆர்வமுடன் ஊர்வலத்தை பார்த்து இனிப்புகளை பெற்றுக்கொண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

சுமார் 60 கி.மீ. நடைபெற்ற ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்ட நமது தோழர்கள் க.கிருஷ் ணன், ச.ஆறுமுகம், தங்கவேல், முருகேசன், மாயவன், மயில் சாமி, துரையரசன், கண்ணன், ராமசாமி, நாகராஜ், துரையன், கலைஅரசன், காஞ்சி மலையான், அர்ச்சுனன், பெரியார் பித்தன், சிவக்குமார், மனோகரன், செல்வராஜ், கணேசன், ஆறுமுகம், அ.பா.நடராஜ், மாணவர் அணி இளந்தென்றல், பகுத்தறிவாளர் கழகம் பெரியசாமி மற்றும் தமிழ்புலிகள் அமைப்பு சார்பில் சாமிநாதன், ரவி, ஈஸ்வரன், தங்கவேல், ஆதித்தமிழர் பேரவை தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அலங்கரிக் கப்பட்ட வாகனத்தை தோழர் கணேசன் ஊர்வலத்தில் கொண்டு சென்றார்.

கொடியேற்றுவிழா படத்திறப்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த இடங்கள்

காலை 7.30 மணி வழக்குரைஞர் பாலமுருகன் தலை மையில் ஆஸ்பத்திரிமேடு, கணியூர் கொடியேற்று விழா படத்திறப்பு. காலை 8.00 மணி அணியூர்பேருந்து நிலையம் அருகில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.ஆறுமுகம் கொடியேற்றினார். காலை 8.30 மணி மனோகரன் தலைமை யில் குருவன் வலசு பேருந்து நிறுத்தம் அருகில் காலை 8.45 மணி பகுத்தறிவாளர் கழக தங்கவேல் கணியூர் மதியழகன் நகர். காலை 9.00 மணி பகுத்தறிவாளர் கழக டி.முருகேசன் கணியூர் புதூர் மடம் பேருந்து நிறுத்தம். காலை 9.15 மணி க.அர்ச்சுனன் காரத்தொழுவு அங்கம் பேருந்து நிறுத்தும் அருகில், காலை 9.30 மணி வெங்கிடு (எ) வெங்கிடாசலம் தலைமையில் ஆங்காலி பேருந்து நிறுத்தம். காலை 10.00 மணி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தோழர் ராமசாமி தலைமையில் சோழமாதேவி அய்ந்து சந்திப்பு. காலை 10.45 மணி மாவட்ட இளைஞர் அணி மாயவன் சோழமாதேவி மேடு பேருந்து நிறுத்தம். காலை 11.00 மணி தமிழ் புலிகள் அமைப்பு தங்கவேல் மடத்துக்குளம் பேருந்து நிலையம், காலை 11.30 மணி பாலப்பம்பட்டி தந்தைபெரியார் சமத்துவ புரத்தில் அய்யா சிலைக்கு மாவட்ட தலைவர் கே.கிருஷ்ணன் மாலை அணிவித்தார். நண்பகல் 12.00 மணி நகரச் செயலாளர் உடுமலை காஞ்சி மலையான் உடுமலை அண்ணா குடி யிருப்பு. நண்பகல் 12.30 மணி சிவக்குமார் தலைமையில் உடுமலை சேரன் போக்குவரத்து கழக பணிமனை எதிர்புரம், நண்பகல் 1.00 மணி பகுத்தறிவாளர் கழக கலையரசன் தலை மையில் போடிபட்டி பேருந்து நிறுத்தம்.

அனைத்து பகுதிகளும் ஊர்வலம் மிக சிறப்பாக நடை பெற்றது. நண்பகல் 2 மணிக்கு தோழர் பெரியார் பித்தன் அவர்களும், காஞ்சி மலையான் அவர்களும் அனைத்து தோழர்களுக்கும் போடிபட்டியில் அசைவ உணவு வழங் கினார்கள்.கீழவடகரை

17.9.2017 அன்று பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா பிறந்த நாள் விழாவும் வாசகர் வட்ட பெயர்பலகை திறப்பு விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் அ.மோகன் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார். நூலகர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார்.

தலைமை ஆசிரியர் ஓய்வு மனுவேல் ராஜன், பொறியாளர் இராஜாமணி, ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய நல்லாசிரியர் தாமோதரன், மணிபூசாரி, ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.  விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், வாச கர்கள், புரவலர்கள் ஆகியோர் கலந்து கொண் டார்கள். முடிவில் வாசகர் வட்ட பொருளா ளர் இபி ஜெயராஜ் நன்றியுரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner