எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஜூன் 18- தஞ்சாவூர் மாதாக் கோட்டை சாலை  கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 10ஆம் ஆண்டு விழா 13.6.2017 அன்று மிக எழுச்சியுடன் நடந்தது.

13.6.2017 காலை 7 மணி முதல் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சர்க்கரை அளவு கண்டறிதல் ஆய்வு திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களின் ஏற்பாட்டில் விஸ்டன் ஜெபராஜ் அவர்கள் 65 பயனா ளிகளுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை சர்க்கரை ஆய்வை நடத் தினார்கள்.

மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பூபதி நினைவு பெரியார் படிப் பகத்தில்  சர்க்கரைப் பரிசோதனை செய்து கொண்ட 65 பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உரையை தஞ்சாவூர் பிரபல மருத்துவர் மருத்துவர் கு.பிரகாஷ் வழங்கினார். மருத்துவர் அஞ்சுகம் பூபதி அறிமுகவுரையாற் றினார். மருத்துவர் கு.பிரகாஷ் அவர்க ளுக்கு கு.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்தார். மாவட்டத் தலைவர் அமர்சிங் நினைவுப் பரிசை வழங்கி னார். விஸ்டன் ஜெபராஜ் அவர்களுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் சால்வை அணி வித்தார். மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி நினைவுப் பரிசை வழங்கி னார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மாலை 6.3-0 மணிக்கு படிப்பக 10ஆம் ஆண்டு விழா மேடை நிகழ்வு தொடங்கியது. ஆசிரியர் ராஜூவின் பாவேந்தர் கலைக்குழுவினரின் பகுத் தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கண்டியூர் மோகன்ராஜ், ஆசிரியர் கோபு.பழனிவேல் ச.சித்தார்த்தன், ஆசிரியர் ராஜூ ஆகியோர் பாடல்களை பாடினார்கள்.

பெரியார் படிப்பகத்திற்கு முன் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பவள விழா நாயகர் ப. தேசிங்கு மாலை அணிவித்தார். ந.பூபதி படத் திற்கு கண்னை கிழக்கு மா.இராமசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

பெரியார் படிப்பக 10ஆம் ஆண்டு விழா நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி தலைவரும் படிப்பக துணைச் செயலாளருமான வழக்குரை ஞர் இரா.சரவணக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். படிப்பக நிர் வாகக் குழு தலைவர் தங்க.வெற்றி வேந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், ஒன்றிய செய லாளர் செ.ஏகாம்பரம், ஒன்றியத் தலை வர் இரா.சேகர், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் மா.அழகிரிசாமி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், படிப்பக உறுப்பினர் முருகானந் தம் வாசகர் சகாயமேரி, மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, படிப்பக புரவலர் ரூபாவதி பூபதி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.குணசேகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் ஆகியோர் உரையை தொடர்ந்து தலைமைக்கழக பேச்சாளர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.

மறைந்த கழக பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்களின் மகன் தஞ்சை ஞானம் மெட்ரிக் பள்ளி தாளாளர் கு. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு உரையாற்றினார். படிப்பக உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.

பெரியார் படிப்பகம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உழைப்பை தந்த கழகத் தோழர்கள் பூவை.முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பெரியார் படிப்பக செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசூவல், மாவட்ட மாண வரணி தலைவர் வே.தமிழ்செல்வன், மண்டல மாணவரணி செயலாளர் அண்ணா.மாதவன், மாவட்ட மாணவ ரணி செயலாளர் இரா.கதிரவன், ஒன் றிய மாணவரணி செயலாளர் மணி கண்டன், படிப்பக உறுப்பினர் சரவ ணன், விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.விஜயக்குமார், செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோருக்கு விழாக் குழு சார்பில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் பயனாடை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித் தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் 37 ஆண்டுகள் பணியற்றி ஓய்வுபெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ப.தேசிங்கு அவர்களுக்கு 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மேடையில் நடைபெற்றது. பவள விழா நாயகர் ப.தேசிங்கு அவரது வாழ் விணையர் லீலாவதி ஆகியோருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசையும் வழங்கினார். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமைச் செயற்குழு உறுப் பினர் இரா.குணசேகரன், முனைவர் அதிரடி க.அன்பழகன், கோபு.பழனி வேல், அ.அருணகிரி, பூவை.முருகே சன், ச.சித்தார்த்தன், சு.முருகேசன், ப.நரேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பயனாடை அணிவித்தனர். தஞ்சை காவேரி அன்னை கலைமன்றத்தின் சார்பில் நாடகவேள் மா.வி.முத்து அவர்களின் குழுவினர் மலர் பூக்களால் தூவி நூற்றாண்டுகாலம் வாழ்க என்ற பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தனர். திருக்குறள் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தேசிங்கு மகன் தே. பொய்யாமொழி, மகள் வெண்ணிலா, பேரக்குழந்தைகள் பகுத்தறிவு, தமி ழிசை, தென்றல் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மா விஜய், மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் சந்துரு, தஞ்சை திமுக கருப்பு, சிவப்பு திமுக பொறுப்பாளர்கள் ராஜ்குமார், காவானூர் தங்கவேல், புதுப்பட்டினம் ரமணி, மாதாக்கோட்டை ஆரோக்கிய ராஜ், மாதாக்கோட்டை செயலாளர் சவு ரிராசன், பெஞ்சமின் மாவட்ட விவ சாயஅணி செயலாளர் பூவை.இராம சாமி, மகளிரணி தமிழ்செல்வி, மல் லிகா ராஜமாணிக்கம், ஜெகதாராணி, நகர மகளிரணி செயலாளர் சாந்தி, கண்ணுகுடி தண்டாயுதபாணி, மாநகர விடுதலை வாசர் வட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, செ.தமிழ்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், இரா.வீரகுமார், குழந்தை கவுதமன், மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், லதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜ்கிரண், பொறி யாளர் பிரபாகரன், படிப்பக உறுப்பினர் சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner