எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஜூன் 17- தஞ்சாவூர் ஒன்றியம், மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.6.2017 மாலை 6.30 மணியள வில் தஞ்சாவூர் கீழவீதி பெரி யார் இல்லத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற் றினார். கூட்டத்தின் நோக்கத் தினை விளக்கி கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா. குணசேகரன் உரையாற்றினார். மாநகரத் தலைவர் பா.நரேந் திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து மண்டலத் தலைவர் வெ.ஜெய ராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், ஒன்றிய இளை ஞரணி தலைவர் ப.விஜயக் குமார், தண்டாயுதபாணி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம், மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்துரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, அ.திருநாவுக்கரசு, மாவட்ட ப.க.செயலாளர் கோபு.பழனி வேல், மாநில மகளிரணி செய லாளர் அ.கலைச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித் தார்த்தன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் மீ.அழகிரி சாமி, மாநில ப.க.பொதுச் செயலாளர் மா.அழகர்சாமி, மாநகர செயலாளர் சு.முருகே சன், ஒன்றிய செயலாளர் செ. ஏகாம்பரம், ஒன்றியத் தலைவர் இரா.சேகர், மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் ஆகியோர் உரையாற்றி னார்கள். மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரி யார்செல்வன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) பெரியார் பெருந்தொண் டர் தஞ்சை வையாபுரி, பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக நிதி அலுவலர் ப.முத் துக்கிருஷ்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டன.

2) 26.5.2017 சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

3) தஞ்சை ஒன்றியம் மற்றும் மாநகரங்களில் தொடர் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. தஞ்சை மாநகரத் தில், கரந்தை, கீழவாசல், அண்ணாநகர், தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளிலும், தஞ்சை ஒன்றியத்தில், வல்லம், மருங் குளம், மாத்தூர், கல்லப் பெரம் பலூர் பகுதிகளிலும் தெரு முனை கூட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டது.

4) கல்லணை கட்டி பெருமை பெற்ற கரிகால்சோழன் பிறந்த நாள் விழாவினை தமிழர் தலைவர் தலைமையில் செப் டம்பர் மாதம் சிறப்பாக நடத் திட, பூதலூர் திருவையாறு ஒன்றியக் கழகத்துடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

5) ஜூலை மாதத்தில் இளைஞரணி, மாணவரணி சார்பில் தஞ்சை மாவட்டம் முழுவதும் கல்லூரி பள்ளி களில் வாயிற் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner