எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மே 18-  திருச்சி புத்தூர், பெரியார் மாளிகையில், 15.5.2017 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறையின் கலந்துரையால் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல் செல்வி தலைமை வகித்து உரையாற்றுகையில்,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மாபெரும் மாநாட்டை திருச்சியில் நடத்துவதற்கு அனுமதித்துள்ளார். எனவே நம்தோழியர்கள், தோழர்கள் அனைவரும் சிறப்பாக செயல் பட்டு மாநாட்டினை வெற்றி பெற செய்ய வேண்டும்.

சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பாலியல் நீதி, பாலியல் வன்கொடுமைகளுக் கான தடுப்பு, சட்டமன்றம் மற் றும் பாராளுமன்றத்தில் பெண் களுக்கான இடஒதுக்கீடு, நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக் கப்படும் அவமானம், இப்படி அனைத்திலும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டிற்காக நடத்தப்ப டும் இம்மாநாடு பிரம்மாண் டமாக வெற்றி பெற வேண்டும்.அதற்காக உங்கள் ஒவ்வொரு வரின் ஒத்துழைப்பும் தேவை யென கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமை செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மகளிர் பாசறை தலைவர் கோ.செந் தமிழ்செல்வி, சென்னை மண்டல திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் உமா, திருச்சி மண் டல அமைப்பாளர் கிரேசி, திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ச.கணே சன், செயலாளர் இரா.மோகன் தாஸ், கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் காளி முத்து,  இலால்குடி மாவட்ட செயலா ளர் அங்கமுத்து, மகளிரணி தலை வர் ரெஜினா பால்ராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மாவட்ட மக ளிர் பாசறை  தலைவர் அம் பிகா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து  தலைமை செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன்,    தொடக்கவு ரையாற்றினார்.

தொடர்ந்து மாநாடு சிறப் பாக நடத்துவது குறித்து  கழ கத் தோழர், தோழியர்கள் மண் டல தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மண்டல செயலாளர் மு. நற்குணம், இலால்குடி மாவட்ட மகளிரணி தலைவர்  அரங்க நாயகி, பொதுக்குழு உறுப் பினர் மு.சேகர்     வெண்ணிலா, அபிநயா, இசபெல்லா, பூங் கோதை, சிவகாமி, பழனியம் மாள், இராஜாமணி, லால்குடி மாவட்ட துணைத் தலைவர்கள் ப.ஆல்பர்ட், அட்டலிங்கம், பெரியார் சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் செந் தில்குமாரி, அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் இரா.திராவிடன் கார்த்திக் ஆகியோர் கள்  ஆலோசனையும்,  கருத்து ரையும் வழங்கினார்கள்.

தீர்மானம்

இக்கலந்துரையாடல் கூட் டத்தில் திருச்சி மண்டலத்திற் குட்பட்ட கரூர் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் தோழர்  பாரத மணி 22.3.2017 மறைவிற்கு இரங்கல் மற்றும்  வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

வருகிற மே.27 இல் தமிழ் நாட்டின் மய்யப்பகுதியான திருச்சியில் மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார் பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்திட அனுமதி தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கலந்துரை யாடல் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

உலகநாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவர் புரட்சி வீராங்கணை அன்னை மணி யம்மையார் பிறந்த நாளில்  கழக தலைவரால் அறிவிக்கப் பட்ட பெண்களை இழிவுப் படுத்தும் மனுதர்ம எரிப்பு போராட்டத்தினை வெற்றிகர மாக நடத்திட்ட திருச்சி மாவட்ட தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

சிறப்பாக செயல்படும் திரா விடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள், மகளிர் களம் 2017 எனும் ஓராண்டு திட்டத்தில் திருச்சி மண்டலத் திற்கு வழங்கப்பட்டுள்ள தமி ழர் தலைவர் பிறந்தநாள் குரு திக்கொடை முகாம் என்னும் களப்பணியினை டிசம்பர் மாதத்தில் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கிறது.

வருகிற மே.27இல் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட் டுள்ள மாபெரும் மாநில மக ளிரணி, மகளிர்பாசறை சார்பில் மாநாடு மற்றும்  மகளிர் அணி வகுப்பு பேரணியை சிறப்பாக நடத்துவதென்றும், இம்மாநாடு வெற்றி பெற கழகத் தலைவர் அறிவுரைப்படி அனைவரும் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வது, மாநாட்டு பணி களை சுவரெழுத்து, நன்கொடை திரட்டுதல், அதிக மகளிர் தோழர்களை பங்கேற்க செய் தல்  உள்ளிட்ட அனைத்து பணி களையும் திருச்சி, இலால்குடி, கரூர் ஆகிய மாவட்ட திராவி டர் கழக தோழர்கள், இளை ஞரணி,பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட அனைத்து அமைப்பு தோழர் களும் இணைந்து பணியாற்றி மாநாட்டை வெற்றி பெற செய் வது என தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகர செயலாளர் சத்திய மூர்த்தி, அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் செபஸ்தியான், செய லாளர் முருகன், காட்டூர் சங் கிலிமுத்து, கனகராஜ், ஸ்டா லின், அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் மாவடியான், திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, மணி வேல், திருவாரூர் சிவக்குமார், மணியன், யாழினி உள்ளிட்ட கழகத் தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட அமைப்பா ளர் இளவரி நன்றி கூறினார்.

லால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அரங்கநாயகி மாநாட்டு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner