எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தூத்துக்குடி, மே 17- விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் நூலகம் அன்னை மணியம்மையார் புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

தமிழர் தலைவர் எழுதிய வாழ்வி யல் சிந்தனைகள் பாகம் 12, அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5, உலகத் தலை வர் பெரியார் பாகம் 5 ஆகிய நூல்கள் இவையாவும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார். மய்யக் கட்ட டத்தில் 6.5.2017 பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ. இராசா தலைமை தாங்கி நடத்தினார். மருத்துவர் செ.வெற்றிவேல் (திமுக மருத்துவரணி மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள் அன்னை மணியம்மையார் புத்தக விற் பனை நிலையத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியாரின் கருத்துக்களை  பேசினார். அப்போது திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

அடுத்த நிகழ்ச்சியாக தமிழர் தலை வர் நூலகத்தை பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள் திறந்து வைத்து அய்யாவின் சேவைகளையும், தேவைகளையும் தெளி வாக விளங்கிப் பேசினார். கூட்டத்தில் சிலர் எழுப்பிய வினாக்களுக்கும் சரியா கப் பதில் கூறி விளக்கம் தந்தார். அவர் கள் தம் உரையிலும் பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தந்தை பெரியார் படிப் பகத்தை பேராசிரியர் ஞா.இராசமாணிக் கம் அவர்கள் திறந்து வைத்து பெரியார் மய்யம் சிறந்த முறையில் அமைக்கப் பட்டிருப்பதாகவும், மேல்தளத்தில் திராவிட இயக்கத்தின் வரலாறுகளை விளக்கும் விதத்தில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந் ததாகவும் தெரிவித்தார்கள்.

தொடர் நிகழ்ச்சியாக நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புடன் தொடங் கியது. அய்யாவின் அடிச்சுவட்டில் நூலினை பெரியார் மய்யம் அமைக்கப் பட தானாக முன்வந்து ஒரு லட்சம் நன்கொடை வழங்கியவரும் நெல்லை மாநகரத் தலைவருமான பி.இரத்தின சாமி  வெளியிட கழகத்தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர்கள் உரையாற் றும்போது தான் வழங்கிய நன்கொடையினை தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு.காசி அவர்கள் சரியாகப் பயன்படுத்தி யதையும் பெரியார் மய்யத்தைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்து உலகத் தலைவர் பெரியார் நூலினை தமிழ் மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளரும் முன்னாள் ஒட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.சோ.வேலுச்சாமி வெளியிட முதல் நூலை மாவட்டத் தலைவர் சு.காசி பெற் றுக் கொண்டார். அவர்கள் உரையில்: பெரியாரின் உழைப்பையும் சாதி அறவே ஒழிக்கப்பட வேண்டும் என வும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகள் நூலினை புலவர் அ.இளங்கோ பாண்டி யன் வெளியிட கழகத் தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர்  உரையாற்றும் போது: தனது மகன்களுக்கு இனநலப் பெரியார், லெனின், தமிழ்இனவேந்தன் எனப் பெயரிட்டிருப்பதாகவும் தனது 15 வய தில் அவரது சொந்த ஊரான நாட்டார் குளத்தில் தந்தைபெரியார் உரையாற்றிய தாக நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து தலைமைக் செயற்குழு உறுப்பினர்  சீ.டேவிட் செல்லத்துரை முன்னிலை உரை நிகழ்த்தினார். பெரி யார் உலகம் அமைக்கும் பணி பற்றி யும், டி.வி. பெரியார் தொடங்குவதில் உள்ள இன்னல்களையும் எடுத்துக் கூறி எப்படியும் டி.வி.  தொடங்கப்படும் எனவும் கூறி மகிழ்ந்தார். தொடர்ந்து முன்னிலை பொறுப்பேற்ற பெரியாரடி யான் அவர்கள் பேசும் போது விடுதலை இதழை அதிகப்படுத்த வேண்டும், பெரியாரியல் பயிற்சி நமது மய்யத்தில் நடத்தப்பட வேண்டுமென ஆலோசனை களை வழங்கினார்.

தலைமைப் பொறுப்பேற்ற செ. இராசா அவர்கள் தனது குடும்பத்தில் நிகழ்ந்த சில தகவல்களை எடுத்துக் கூறி சாதி ஒழிந்த சுதந்திரம் வரவேண்டும் எனவும் கூறினார்.

இறுதியாகச் சிறப்புரையாற்றிய நெல்லை மண்டலத் தலைவர் மா.பால் இராசேந்திரம் அவர்கள் வெளியிடப் பட்ட நூல்களில் உள்ள தகவல்களையும் அய்யாவின் தொண்டைப்பற்றிம் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கடின உழைப்பைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி, மாவட்டச் செயலாளர் இராசேந்திரன், அரியமுத்து, பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் தலைவர் நூலகத்திற்கு நிறைய நூல்கள் வழங்கி சிறப்பித்தார்கள். கூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி அவர்கள் கலந்து கொண்டதுடன் ரூ. 2000- இரண்டாயிரம் கட்டட நிதி வழங் கினார்.

முன்னாள் மாவட்டத் தலைவர் வ.தமிழரசி அவர்களும் அவர்தம் துணைவருமான வசந்தகுமார் அவர்க ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடி யாத நிலை குறித்து தொலைபேசி மூலம் தகவல் தந்ததுடன் கூட்டச் செலவுக்காக ரூ.5000 அய்யாயிரம் கொடுத்து உதவினார்கள்.

நெல்லை மண்டல இளைஞரணிச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தோழர் களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள். கூட்டத்தில் கோவில்பட்டி தோழர் களுடன் தென்காசி நெல்லை, திருச் செந்தூர் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்கள் மேல்மாந்தை பெ.காலாடி பொதுக்குழு உறுப்பினர், துவ ரந்தை முத்துராசு, திருச்செந்தூர் இரா. சேகர், ஆசிரியர் சிவசங்கரன், தி.மு.க அன்பழகன், இளைஞரணித் தலைவர் இல. கார்த்திகேயன், செயலாளர் ஆ.கந்த சாமி, அமைப்பாளர். த.செல்வராசு, அய்யம் பெருமாள், வளர்மதி பெரி யார்தாசன், செந்தில் ஆறுமுகம், பொ.செல்வராசு, இரா.ஆழ்வார், எல்அய்சி  குமரேசன், மனோகரன், பொ.சாந்தி, விக்டர், பழனிச்சாமி, சுப்புராசு திருச்சி டிடிசி. மெக்கானிக் கனகராசு, ஆ. செல் வக்கனி வழக்குரைஞர் இராஜேந்திரன், மதிவாணன்,  இ.பி.சக்திவேல், பேராசி ரியர் இரா. சண்முகசுந்தரம் உட்பட கழகத் உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர் பொது மக்கள் மாணவர் கள், மாணவிகள் என சுமார் 100 கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.

மாவட்டத் தலைவர் சு. காசி அவர் கள் வரவேற்புரையில் வருகை புரிந்த வர்களைப் பற்றிய சிறப்புகள் பற்றி விளக்கி வரவேற்புரையாற்றினார். அனைவருக்கும் பயனாடைக்குப் பதில் நூல்கள் வழங்கப்பட்டன. ஒரு பய னாடை கூட அணிவிக்கப்படவில்லை.

கூட்ட ஏற்பாட்டிற்காக 1000 துண்டு பிரசுரங்கள், 10 தட்டிபோர்டுகள், பேனர், 15க்கு10 டிஜிட்டல் போர்டு 1, தாள் கொடிகள், 50 கழகக் கொடிகள், மைக் செட், சேர், சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகள் சிற்பபாகச் செய்யப்பட்டது.

இறுதியாக மாவட்டச் செயலாளார். மு.முனியசாமி நன்றி கூறக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner