எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 16
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மேம்பாடு பற்றிய அரசமைப்புச் சட்டத்தின் 123ஆம்  திருத்த மசோதா பற்றி அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களவை தெரிவுக் குழுவின் முன் கருத்துகளை தெரிவிக்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அழைக்கப்பட்டதன் பேரில் டில்லி சென்று குழுவினர் முன்னர் திராவிடர் கழகத்தின் சார்பாக கருத்து - ஆலோசனைகளை வழங்கினார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரச மைப்புச் சட்ட அதிகாரத்தினை அளித்திடும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசமைப்புச் சட்ட 123ஆம் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற் றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு தெரிவுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சமூக நீதியில் அக்கறை கொண்ட தலைவர்கள், அறிஞர்களை அழைத்து தெரிவுக் குழுவினர் மசோதா பற்றிய கருத்துக் களை கேட்டறிந்து வருகின்றனர்.

மாநிலங்களவை செயலகத்தின் அழைப்பின் பேரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி நேற்று (15.5.2017)  டில்லியில் நாடாளுமன்ற - இணைப்பு இல்லத்தில் மாநிலங்களவை தெரிவுக் குழுவின் முன் அரசமைப்புச் சட்ட 123ஆம் திருத்த மசோதா பற்றிய கருத்துகள் மற்றும் ஆலோசனை நேரில் வழங்கினார்.

மாநிலங்களவை தெரிவுக் குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவ் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களை அங்கமாகக் கொண்டுள்ள குழுவின் முன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சுமார் 30 நிமிடங்கள் கருத்துகளை வழங்கினார்.

தமது கருத்துகளின் சாராம்சமாக தமிழர் தலைவர் கூறியவை:

பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறியும் பொறுப்பு மற்றும் அதிகாரம் இதுநாள் வரை மாநிலங்கள் வசம் இருந்தது. சமூகரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட் டோரைக் கண்டறியும் பணியினை மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள மாநில அரசுகள்தான் சரியாக மேற் கொள்ள முடியும்.

திருத்த மசோதாவானது, பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணும் பணியினை மத்திய அரசிற்கு அளிக்க  இருக்கிறது. எனவே மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே திருத்த மசோதா வில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு பிற்படுத் தப்பட்டோருக்கான மத்திய அரசின் பட்டியலுக்கு மாநி லங்களின் பரிந்துரையின் பேரிலும், மாநிலப் பட்டி யலுக்கு அந்தந்த மாநில அரசுகளே அடையாளம் காணும் பணியினை நடத்திட ஆவண செய்திட வேண்டும்.

மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர் ஆணையங்களுக்கு இணையாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்ட அதிகாரத்தினை வழங்கிடும் வகையில் முழு அதிகாரம் மிக்க ஆணைய மாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தெரிவுக் குழுவின் கூட்டம் நிறைவடைந்த பின்னர், நடைபெற்ற தேனீர் விருந்தில் மாநிலங்களவை தெரிவுக் குழுவினர் தலைவர் பூபேந்தர் யாதவ் (பாரதிய ஜனதா கட்சி), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), பி.கே.ஹரி பிரசாத் (காங்கிரஸ் கட்சி), கனிமொழி (திராவிட முன்னேற்றக் கழகம்), கிருஷ்ணன் (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகியோர் தமிழர் தலைவருடன் உரையாடினர்.

டில்லி பெரியார் மய்யத்தில் தமிழர் தலைவர்

டில்லி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை டில்லி பெரியார் மய்யத்தில் செயல்பட்டு வரும் பெரியார் மேலாண்மை மற்றும் கணினி மய்யத்தின் இயக்குநர் முதல்வர் சுசீல் சாப்ரா, பூங்கொத்து அளித்து வரவேற்றார். உடன் மய்யத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சுனில், நிர்வாக அலுவலர் சோனம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளனர்.

சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் மன்ற பொறுப்பாளர்களுடன் சந்திப்பு

டில்லி வந்த தமிழர் தலைவரை சமூக நீதிக்கான வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளர் ஏ. சுப்பாராவ் (உச்சநீதிமன்ற முதுநிலை வழக்கறிஞர்) சந்தித்து உரையாடினார். அம்பேத்கர் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் சிக்கந்தர் மற்றும் ஜேசிபி நிறுவனத்தின் துணைத் தலைவர் மணி ஆகியோரும் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்.

சமூகநீதிப் போராளிகளின் தலைவர் சந்திரஜித் யாதவ் இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்றார்

காலம் சென்ற சமூகநீதிப் போராளி - தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களின் டில்லி  - இல்லத்திற்குச் சென்று அவரது துணைவியார் ஆஷா யாதவ் மற்றும் அவரது வாழ்நாள் உதவியாளர் சோட்டிலால் ஆகியோரைச் சந்தித்து உரையாடி தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner