எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஏப். 20- ருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவி ஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் கரு நாடக மாநிலத் தலைவர் மு.சானகி ராமன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர்கள் வீ.மு.வேலு, தங்கம் இராமச்சந்திரன், பு.த.கஜபதி முன்னிலையில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் படத் தினை அனிதா ஆனந்தவேலன், பாவேந்தர் படத்தினை தங்கம், பிரேம்குமார் துணைவியர் பிரபா வதி, ஜெயலட்சுமி கஜபதி திறந்து வைத்தனர்.

முன்னதாக சு.ஒளிமலர வன் கழக கொடியை ஏற்றி வைத்து கழகப் பாடலை இசையுடன் பாடி னார். அடுத்து நடவரசன், கி.சு. இளங்கோவன், வீ.மு.வேலு, தங் கம் இராமச்சந்திரா, வீ.இரத்தினம் வழக்குரைஞர் ஜெ.அருண், வழக் கறிஞர் பிரிவுத் தலைவர் சே.குண வேந்தன், இந்து செய்தியாளர் வினோத் உரையாற்றினார். நிறை வாக கழக மூத்த பெரியார் பெருந் தொண்டர் முத்துசெல்வன் அண் ணல் அம்பேத்கர், பாவேந்தரைப் பற்றிய உரை நிகழ்த்தினார்.

நிறைவாக கே.எஸ். கார்டன் செயலாளர் சேனந்தன் நன்றி உரை நிகழ்த்தினார். மதிய உரைவினை மறைந்த பிரேம்குமாரின் துணைவி யார் பிரபாவதி, அடையார் ஆனந்த பவன் மேலாளர் கழகச் செயற்குழு உறுப்பினர் ந.சிவசங்கர் வழங்கி சிறப்பு செய்தனர்.

மாநிலத் தலை வர் மு.ஜானகிராமன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner