எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

தஞ்சாவூர், மார்ச் 20- பெண்களை இழிவுபடுத்தும் மனுத ர்மத்தை பெண்களே முன்னின்று எரிக்கும் போராட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு எழுச்சியுடன் நடைபெற்றது.

அன்னை மணியம்மையார்

படத்திற்கு மாலை அணிவிப்பு

போராட்டம் தொடங்குவதற்கு முன் அன்னை மணி யம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத் திற்கு மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சொர்ணா ரங்கநாதன், ஜெயமணி குமார், செல்வமணி அஞ்சுகம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து முழக்கங் களை எழுப்பினர்.

மனுதர்ம எரிப்பு போராட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி தலைமை வகித்து உரையாற்றினார். குடந்தை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ராணி, குருசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் மு.செல்வமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஏ.பாக்கியம், தஞ்சை மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், புதுக்கோட்டை மண்டல செயலாளர் தேன் மொழி, குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயக் குமார், குடந்தை மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, பட்டுக்கோட்டை மகளிரணி செயலாளர் நீ.தேவி, அறந்தாங்கி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஞானம்பாள், புதுக்கோட்டை மாவட்ட மகளிரணி செயலாளர் வசந்தா ஆகியோர் முன்லை வகித்தனர்.

விளக்கவுரை:

ஆர்ப்பாட்டத்தை விளக்கி கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார்.

பங்கேற்றோர்: தஞ்சை மாவட்டம்

ஜெகதாரணி, ச.ப.யாழிசை, அகிலா, முருகானந்தி, ஈஸ்வரி, இந்துமதி, லட்சுமி, சங்கீதா, அனிதா, முருகம் மாள், பழனியம்மாள், கனிமொழி, சொர்ணத்தம்மாள், திருவையாறு காத்தம்மாள், ருக்குமணி இந்திரா, மல்லிகா கோகிலா, அன்புமணி, மலர்கொடி, லதா லவிக்குமார், கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், மண்டல செயலா ளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணைத் தலைவர் வ.இளங்கோவன், மாவட்டத் துணைத் தலை வர் இராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ச.சந்துரு, கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் இராம கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் மா.வீரமணி, மாவட்ட ப.க. செயலாளர்  கோபு.பழனிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.தன பால், திருவையாறு ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன் றிய செயலாளர் வழக்குரைஞரணி ஸ்டாலின், அம்மாப் பேட்டை ஒன்றிய அமைப்பாளர் காத்தையன், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் லெட்சுமணன், ஒன்றிய விவசாய அணி தலைவர் இரா.சுப்ரமணியன், ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் அன்பரசன், தஞ்சை ஒன்றிய இளைஞ ரணி தலைவர் ப.விஜயக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மாநிலக் கலைத்துரை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை நகர இளைஞரணி செயலாளர் மா.இராசராசன், துணைத் தலைவர் அ.பெரியார் செல் வன், ஊரச்சி திருநாவுக்கரசு, நெல்லுப்பட்டு இராமலிங் கம், பூவை.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கை.முகிலன் மணியன், பூதலூர் ஒன்றியத் தலைவர் அற்றூர் பாலு, செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரச்செயலாளர் சு.முருகேசன், அமைப்பாளர் ரவிக்குமார், மாநகர துணைத் தலைவர் டேவிட், செண்பகபுரம் தமிழ்செல்வன், மாவட்ட வழக் குரைஞரணி தலைவர் சரவணக்குமார், சிந்தனையரசு, கண்டியூர் மோகன்ராவ், பெரியார்சித்தன், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணியன், தஞ்சை ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், பெரியார் பெருந்தொண்டர்கள் தண்டாயுதபாணி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் நாத்திகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் மாவட்டம்

வசந்தி, கமலா, செல்வராணி, தங்காத்தாள், திரிபுரசுந் தரி, சங்கீதா, செந்தமிழ்செல்வி, மணிமேகலை, அம்பிகா சி.சமத்துவம் இராசுமதி, ஜீவாராணி, செல்வி, பரிமளா, நிசாந்தி, நித்யா, தேன்மொழி, குழசாம்பாள், சாந்தி தமிழ்மணி. மலர், நதியா, ஜான்சிராணி, ராணி, தில்லை மண்டோதரி, மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் க.குருகசாமி, மாவட்டத் துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், ஒன்றிய தலைவர் நில்ராஜி, குடந்தை நகரத் தலைவர் கவுதமன், குடந்தை நகரச் செயலாளர் ரமேஷ், குடந்தை ராசப்பா, வலங்கை ஒன்றிய தலைவர் வீரமணி, சோழபுரம் நகரச் செயலாளர் மதியழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், பாபநாசம் திருஞான சம்பந்தம், குடந்தை மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் நிம்மதி, பிழைபொறுத்தான், திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் பட்டம் மோகன், பெரியார் மாளிகை கோவிந்த ராஜ், கபிஸ்தலம் கணேசன், வலங்கை ஒன்றியத் தலை வர் சந்திரசேகரர், செயலாளர் பவானிசங்கர், வலங்கை வரதராசன்

பட்டுக்கோட்டை மாவட்டம்

மாலதி வீரையன், சிராங்குடி ஜோதி, புலவஞ்சி தேவி, சிராங்குடி ராசலட்சுமி, நெய்வேலி சுமித்திரா, பிரேமாவதி, விஜயலெட்சுமி, ரம்யா ரமேஷ், இந்திரா வீரத்தமிழன் சி.சுமதி, இலக்கியா, மணிமொழி, தேவி, சாமியம்மாள், பிரியா, மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் ஜோதி, வீரமணி, மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் அரு.நல்லத்தம்பி, மன்னை.ரத்தினவேல், உள்ளிக்கோட்டை குமாரசாமி, மேலவாசல் திரிசங்கு, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், கோரா.வீரத்தமிழன், ராஜேஷ்கண்ணன், சிரஞ்சியாகப்பா, மாரிமுத்து, நீடா மங்கலம் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, மதுக்கூர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் சுப்பையா, கை.சுந்தரி, மா.வினோதினி, திருமயம் மாரியப்பன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

அறந்தாங்கி கழக மாவட்டம்

மண்டலத் தலைவர் பெ.இராவணன், ஆலங்குடி செல்வராணி கறம்பக்காடு மா.மலர், பாலகிருஷ்ணபுரம, கீதா, ம.யாழினி, ஆலங்குடி ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள் (குழந்தைகள்) கைது

வி.இளமாறன், சின்னையன், கவிபாரதி, அறிவுச்ª சல்வன், ச.ப. யாழிசை, கனிமொழி

3 மாத குழந்தை போராட்டத்தில் கைது

திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் நிம்மதி - வசந்தி ஆகியோருடன் அவர்களது 3 மாதக்குழந்தை பெருமையும் பங்கேற்றது சிறப்புக்குரியது.

9 மாதக் கர்ப்பிணி ஆர்ப்பாட்டத்தில் கைது

தஞ்சாவூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான சங்கீதா போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார்.

பார்வையற்றவர்களும் கைது

மாநிலக் கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் அவர்களின் தாயார் சரோஜா அம்மையார் அவர்கள் இரண்டு கண்களும் பார்வையற்ற நிலையிலும் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார்.

காலை 11 மணியளவில் மனுதர்ம எரிப்புப் போராட் டத்தில் ஈடுபட்ட மகளிர் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தை விளக்கி ஒலிமுழக்கங்களை எழுப்பி மனுதர்மத்தை எரித்தனர். 12 மணியளவில் போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தஞ்சாவூர் கீழவாசல் நவமணி திருமண மண்டபத்தில் அடைத்தனர். இலவசமாக மண்டபம் கிடைத்ததை பயன்படுத்திய கழகத்தினர் பட்டிமன்றம், உரைவீச்சு, பாடல்கள் என காலை முதல் மாலை வரை சிறு இடைவெளி கூட இல்லாமல் கொள்கை பிரச்சார குடும்ப விழாவாக அமைத்துக்கொண்டனர். ஒவ்வொரு மகளிரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர். அனைவரும் குழு படம் எடுத்துக் கொண்டனர். அனை வருக்கும் மாவட்டத் தலைவர் அமர்சிங் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக காவல்துறையினர்அறிவித்தனர். அனைவரும் பிரியா விடைபெற்று சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner