எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், மார்ச் 9  பாகிஸ்தானில் மரங்களை குண்டு வீசி அழித்ததாக இந்திய விமானப் படை விமானிகள் மீது அந்த நாட்டு அரசு முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப் படை அந்த நாட்டின் பாலாகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலையே இவ்வாறு குறிப்பிட்டு எஃப்.அய்.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளி யாகும் எக்ஸ்பிரஸ் நியூஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீச்சு நடத்தியது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் வனத் துறை, இந்திய போர் விமானிகளுக்கு எதிராக எஃப்.அய்.ஆர். பதிவு செய்துள்ளது.

அந்த அறிக்கையில், அடையாளம் தெரி யாத இந்திய விமானப் படை விமானிகள், பாலாகோட் பகுதியிலுள்ள வனப் பகுதியில் மரங்களின் மீது குண்டு வீசினர். அதில் 16 மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது

பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டுகள் வீசியதாகவும், அதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும் இந்தியா கூறி வருகிறது.

எனினும், அதனை மறுத்து வரும் பாகிஸ் தான், எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானங்களை நோக்கி பாகிஸ்தான் போர் விமானங்கள் விரைந்து சென்றதாகவும், அதையடுத்து இந்திய விமானங்கள் அவசர அவசரமாக குண்டுகளை வீசிவிட்டு அங் கிருந்து திரும்பிச் சென்றதாகவும் கூறி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner