எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மியான்மா, பிப். 21- வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு அளித்து வரும் ஆதரவைக் கைவிடாவிட்டால், அனைத் தையும் இழக்க நேரிடும் என்று அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து, ஃபுளோரிடா மாகா ணம், மியாமி நகரிலுள்ள ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் டிரம்ப் பேசியதாவது:

வெனிசுலாவில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் அந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா முழு ஆத ரவை வழங்கி வருகிறது.

வெனிசுலாவில் ஜனநாயகம் தழைப் பதில் அந்த நாட்டு ராணுவமும், ராணுவ தலைமையும் முக்கிய பங்கு வகிக்க முடியும். அந்தப் பாதையை வெனிசூலா ராணுவம் தேர்ந்தெடுத்தால் அது அந்த நாட்டுக்கு பாதுகாப்பான, வளமான எதிர் காலத்தை உருவாக்கும்.

தற்போது வெனிசுலாவின் இடைக் கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை 50-க்கும் மேற் பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. சோச லிச மற்றும் சர்வாதிகார நாடு என்னும் நிலையிலிருந்து ஜனநாயக நாடு என்ற நிலைக்கு வெனிசுலாவை அந்த நாட்டு மக்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இனி அந்த முயற்சியிலிருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள். வெனிசுலா உள்பட லத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அங்கு சோச லிசம் மறைந்து வருகிறது; சுதந்திரம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகியவை தழைத் தோங்கி வருகின்றன.

நிக்கோலஸ் மடூரோவுக்கு ராணுவம் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், அத னால் ஏற்படும் பின்விளைவுகளிலிருந்து அது தப்ப முடியாது. அந்த நிலை நீடித் தால் ராணுவம் அனைத்தையும் இழக்க நேரிடும் என்றார் அவர்.

வெனிசுலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக் கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட் சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட் டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படு கிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர் தலில் எதிர்க்கட்சிகளின் அய்க்கிய ஜனநா யகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தருவதற்கு பதிலாக,  புதிய அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்த மடூரோ, வெனிசுலாவில் தொடர்ந்து ஆட்சி செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முன்கூட்டியே நடைபெற்ற சர்ச் சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட மடூரோ, வெனிசூலா அதிபராக கடந்த மாதம் 10ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளு மன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ, நாட்டில் நியாயமான அதிபர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மடூரோவை வலியுறுத்தியதுடன், அது வரை இடைக்கால அதிபராக தாம் பொறுப்பு வகிக்கப்போவதாக அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner