எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 19- அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட பன்னாட்டு நாடுக ளுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.

இந்த நிலையில் வட கொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெ டுத்ததற்காக அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே பரிந்துரைத் துள்ளார். அத்துடன் அவர் பரிந்துரை கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார். வாசிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், இந்த தக வலை தெரியப்படுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner