எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லாகூர், பிப். 10- பாகிஸ்தானில் 2008---2012 வரையிலான காலக் கட்டத்தில் பிரதமராக இருந்தவர் யூசுப் ரசா கிலானி. இவர் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு விளம்பர நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அர சுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூரில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை குடியுரிமை அதிகாரி கள் தடுத்து நிறுத்தினர். நாட்டை விட்டு வெளியேற அனு மதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினர்.

டார்லிங் துறைமுகத்தில் 764 மக்கள் ஒன்றாக சாப்பிட்டு கின்னஸ் சாதனை!

பெய்ஜிங், பிப். 10- சிட்னியில் உள்ள டார்லிங் துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக சாப்பிட்டு உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தி யுள்ளனர். சீனாவில் கடந்த 5ஆம் தேதி புத்தாண்டான  பன்றி ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சீனாவில் உள்ள நகரங்கள் முழுவதும் மின் னொளி மற்றும் வாணவேடிக்கையால் விழாக்கோலம் பூண் டது. மேலும் இந்த புத்தாண்டினை வசந்தகால விழா எனும் பெயரில் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், வழி பாடுகள், பல்வேறு கொண்டங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீன புத்தாண்டின் முதல் நாளை கொண்டாடும் வகையில் சிட்னியில் உள்ள டார்லிங் என்ற துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு உண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். டம்ப்ளிங் எனப்படும் பாரம்பரிய உணவை குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் சாப்பிட்டனர். இதற்காக சுமார் 4,000 டம்ப்ளிங்களை மக்கள் அவர்கள் கைப்படவே செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை பதிவாளர்கள் இதனை கண்காணித்தனர். 100 மேசைகளுக்கு 10 பேர் என்ற கணக்கில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் சாப் பிட்டதை தொடர்ந்து பார்வையிட்டனர். பின்னர் சிட்னி கவுன் சிலர் ஜெஸ் ஸ்கில்லியின் கின்னர் விருதை பெற்றுக்கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner