எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீஜிங், ஜன. 6-  ஒரு குடும்பத் துக்கு ஒரு குழந்தை என்ற அதி ரடி திட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரம் என்ற விகிதத்தில் மக் கள் தொகை பெருக்கம் அதிக ரித்து வந்தது. குடும்ப கட்டுப்பாடு திட் டத்தை கட்டாயமாக அமல் படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்து உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் யி புஸியான் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் ஆக இருந்தது.

அதே நேரத்தில் பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைந்து விட்டது. இது போன்ற அதிக மாக மக்கள் தொகை குறைந்து வருவது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில் மக்கள் தொகை குறைவதன் மூலம் மனித உழைப்பும் குறையும். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பென்சன் மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற வற்றின் தேவையும் அதிகரிக்கும். நாட்டின் சமூக வளர்ச்சி பணியில் 7 பேர் பணியாற்றி வரும் சூழ்நிலையில் மக்கள் தொகை குறைந்ததன் காரணமாக 2030 ஆம் ஆண்டில் அது 4 பேர் என்ற அளவில் குறையும் என்று யி புஸியான் தெரிவித்துள்ளார். இதை எற்கனவே அறிந்த சீன அரசு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இருந்தும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner