எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்கா நாட்டின் நகர மேயர் தமிழக ஆளுநருக்கு வேண்டுகோள்

நியூயார்க், நவ.25 தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், என்று அமெரிக்க நாட்டின் கனட்டிக்கட் மாநிலத்தில் உள்ள நார்விச் நகரத்தின் மேயர் பீட்டர் ஆல்பர்ட் நிஸ்ட்ரோம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநருக்கு அமெரிக்க மேயர் வேண்டுகோள்

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை கையெழுத்து இயக்கம் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவருகிறது. தற்போது அமெரிக்க நாட்டின் கனட்டிக்கட் மாநிலத்தில் உள்ள நார்விச் நகரத்தின் மேயர் பீட்டர் ஆல்பர்ட் நிஸ்ட் ரோம் 7 பேர் விடுதலைக்கு ஆதரவான தமிழக அமைச் சரவை தீர்மானத்தினை ஏற்று விடுதலை செய்யும்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு வேண்டுகோள் கடிதம் எழு தியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், 28 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை மனிதநேயத்துடன் அணுகும்படி வேண்டுகோள் விடுத்துள் ளார். இது தனது விருப்பம் மட்டுமல்ல. நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் வழியில் மனித உரிமைகளுக்காக போராடும் அனைவரின் விருப்பமும் ஆகும் -என அதன் தொடர்ச்சியாக தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தினை அமெரிக்காவில் 7 பேர் விடுதலைக்கான கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து வரும் கார்த் திகேயன் தெய்வீகராஜன், கார்த்திகேய பிரபு நடராஜன், ஜெயகணேஷ் ஆகியோரிடம் தனது அலுவலகத்தில் ஆளுந ருக்கு அனுப்பிவைக்க நார்விச் நகரத்தின் மேயர் பீட்டர் ஆல்பர்ட் நிஸ்ட்ரோம் கையெழுத்திட்டார்.

தமிழ்ச் சங்கம்-சீக்கியர்கள்

ஏற்கனவே அமெரிக்க கனட்டிக்கட் தமிழ்ச் சங்கம் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தனித்தனி கடிதங்கள் அனுப் பினர். தமிழர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களும் 7 பேரின் விடுதலைக்கு ஆதர வான கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து ஆளுநருக்கு கடிதங்கள் அனுப்பிய நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அச்சடிக்கப்பட்ட 2000, 500 ரூபாய் கள்ளநோட்டு!

அகமதாபாத், நவ.25- பணமதிப்பு நீக்கம் மூலம் கறுப்புப் பணம், கள்ளநோட்டை ஒழித்து விட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்து வரு கிறார். ஆனால், அவரது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் இப்போதும் கள்ளநோட்டு அச்சிடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

குஜராத்தின் பதான் மாவட்டத்திலுள்ள பலன்பூர் என்ற பகுதியில், கள்ளநோட்டுக் கும்பல் ஒன்றைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 3 பேர் கொண்ட அந்த கும்பலிடமிருந்து, மோடி அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய்,500 ரூபாய் நோட்டுகள் மட்டுமன்றி 100, 50, 20, 10 ரூபாய் கள்ளநோட்டுகளும் பிடிபட்டுள்ளன. கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கணினி, ஸ்கேனர், கலர் பிரிண்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருட் களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner