எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைரோபி, நவ. 23- ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மய்யம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

அவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி காவல்துறையினர் விசாரணை நடத்து கின்றனர்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அழைப்பு

இசுலாமாபாத், நவ. 23- அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள் அடிக்கடி மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் சிறந்த தொழில்முறை மற்றும் தீவிர போரிடும் திறன் கொண்டது. அத்தகைய பாகிஸ்தான் ராணுவம், தாய்நாட்டை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதை புரிந்து கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை இந்தியா ஏற்படுத்த முயன்றால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.

அப்போது எல்லைப் பகுதி நிலவரம் குறித்து பாஜ்வாவி டம் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner