எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், நவ. 11- "தென் சீனக் கடலில் எந்த நாடும் ராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது' என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள சீன அரசின் முதன்மை நிர்வாகக் குழு உறுப் பினர் யாங் ஜியேசி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன் இணைந்து வாசிங்டனில் செய் தியாளர்களிடம் கூறியதாவது: தென் சீனக் கடல் பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கான உரிமை குறித்த அமெரிக்காவின் கருத்தை ஆதரிக்கிறோம். ஆனால், அதனைக் காரணம் காட்டி, எந்தவொரு நாடும் அந்தப் பகுதியில் ராணுவ ஆக்கிரமிப்பு செய்து, அந்தப் பகுதியை ராணுவமயமாக்குவதை ஏற்க முடியாது என்றார் அவர்.

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ: 9 பேர் பலி

பியூட், நவ. 11- அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த மாகாணத்தின் பியூட் மாவட்ட காவல்துறை அதிகாரி கொரே ஹோனியா கூறுகையில், வடக்கு கலிஃபோர்னியா பகுதி காட்டுத் தீ காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சிலர் வாகனங்களிலும் இருந்தபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து தகவல்கள் இல்லை என்று தெரிவித்தார்.

கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில், சுமார் 140 சதுர கி.மீ. பரப்பளவில் பரவி வரும் காட்டுத் தீயினால், இதுவரை 6,500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner