எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிளாஸ்கோ, நவ. 9- எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திற னாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல் கலைக்கழகம் டாக்டர் பட் டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

கவுரவ டாக்டர் பெற்ற மகிழ்ச்சியில் உள்ள அரு ணிமா சின்ஹா, "இளைஞர் கள் தங்களுடைய இலக்கை அடைவதற்கு முழு முயற்சி யுடன் ஈடுபட்டால், அவர்க ளின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்'' என் றார்.

கால்பந்து வீரரான அரு ணிமா சின்ஹா, ஒருமுறை ரயிலில் கொள்ளை முயற் சியை தடுக்க முயன்றபோது கொள்ளையர்களால் தூக்கி வெளியே வீசப்பட்டார். அதில், அவரது இடது கால் கடுமையாக சேதமடைந்த தால், முழங்காலுக்கு கீழே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. காயம் குண மடைந்த பிறகு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பாலிடம், மலை யேறும் பயிற்சி பெற்று வந் தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ் டின் உச்சியை (8,848 மீட்டர்) அடைந்து சாதனை படைத் தார். இந்தச் சாதனை மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திற னாளி பெண் என்ற பெருமை யைப் பெற்றார். இதேபோல், ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயரமான சிகரங்களின் உச்சியை அடைந் தும் அருணிமா சின்ஹா சாதனை படைத்துள்ளார்.

இவருடைய சாதனைக ளைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பத்ம சிறீ விருது வழங்கி கவு ரவித்தது  குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner