எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திம்பு, நவ. 9- இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் செரிங் தோபே தலைமையி லான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி, டி.என்.டி. மற்றும் டி.பி. டி. ஆகிய கட்சிகள் மோதின. ஓட்டு எண்ணிக்கையில் டி. என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக டி.பி. டி. கட்சி 2ஆ-வது இடம் பிடித்துள்ளது. பிரதமர் தோபே வின் ஆளும் பி.டி.பி. (மக்கள் ஜனநாயக கட்சி) படுதோல்வி அடைந்து 3-ஆவது இடத்தை பிடித்தது. பூட்டான் அரசியல் சட்டப் படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-ஆவது சுற்று போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்.

அதன்படி கடந்த அக்டோ பர் 18-ஆம் தேதி 2-ஆவது சுற்றுத் தேர்தல் நடந்தது. இதில் டி. என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் 30 தொகுதிகளை டிஎன்டி கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் லோட்டே செரிங் பிரதமராக நேற்று பதவியேற்றார்.

அவருக்கு பூட் டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சக் பாரம்ப ரிய முறைப்படி பதவிப்பிர மாணம் செய்து வைத்தார். புதிய பிரதமர் லோட்டே ஷெரிங் தலைமையிலான 10 அமைச்சர்கள் கொண்ட அமைச் சரவையும் பதவியேற்றது. எதிர்க்கட்சி தலைவர், பேர வைத் தலைவர் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner