எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், நவ. 9- பாகிஸ் தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறித்துவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதி மன்றம் கடந்த மாதம் 31ஆம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அர சியல் கட்சிகள் மற்றும் மத வாத அமைப்புகள் நாடு முழு வதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப் புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. தீவிர மதப்பற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கள் வெளியாகின. மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட் டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப் பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக் கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத் துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர் லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்க ளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள் ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந் துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அதேசமயம் இசுலாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner