எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், நவ. 9- சர்வதேச நிதியக் கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு தாம் அளிக்கவிருக்கும் நிதியுதவி குறித்த விவரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுத்துள்ளது. சீனா-பாகிஸ்தான் வர்த்தக வழித்தடத்துக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், சர்வதேச நிதியத்தின் (அய்எம்எஃப்) கடனை அடைப்பதற்காக நட்பு நாடுகளின் உதவியை பிரதமர் இம்ரான் கான் நாடி வரும் சூழலிலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2ஆம் தேதி முதல் சீனாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்பட முக்கியத் தலைவர் களைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது, அய்எம்எஃப் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு 600 கோடி டாலர் (சுமார் ரூ.43,580 கோடி) நிதியுதவி அளிக்க சீனா ஒப்புக் கொள்ளும் என்று கூறப் பட்டது. ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு 600 கோடி டாலர் நிதியுதவி அளிக்க சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு கூறப்பட்டது.

எனினும், அந்தத் தொகை குறித்த விவரங்களை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. "பாகிஸ்தானுக்குத் தேவையான நிதியுதவி அளிக்கப்படும்' என்று மட்டும் அவர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில், சீனாவின் நிதியுதவி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக பாகிஸ்தான் குழுவினர் வரும் வெள்ளிக் கிழமை மீண்டும் சீனா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவி குறித்த விவரங்களை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர்.  அதற்கு சுன்யிங் அளித்த பதிலில், "சீனாவும், பாகிஸ்தானும் இணைபிரியா கூட்டாளிகள். எங்களால் முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவோம்' என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner