எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யவுன்ட், நவ. 8- மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வட மேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப் பாக்கி ஏந்திய பயங்கரவாதி களால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட் டுநர் ஒருவரும் கடத்தப்பட் டனர்.

கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவி ரமாக ஈடுபட்டு இருந்தது.

இந்நிலையில், பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட மாண வர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர் களுடன் ஓட்டுநரும் விடுவிக் கப்பட்டார். ஆனால் கடத்தப் பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யா மல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள் ளனர்.

அவர்களை கடத்தியதற் கான காரணம் மற்றும் பயங்கர வாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாக வில்லை என கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner