எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுலாவெசி, அக்.10 இந்தோனே சியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக  பதிவானது.  இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ வும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.

இந்தோனேசியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி காரண மாக உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 2,000-அய் நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆயிரம் பேரை காணவில்லை என்று கூறப் படுகிறது.

இடிபாடுகளில் இன்னும் மீட்கப்படாமல் உள்ள ஏராள மான உடல்கள் அழுகி வருவ தால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 


 

பயனாளர்கள் தகவல் திருட்டு

கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது !

வாசிங்டன், அக்.10 பயனாளர்களின் தனிப்பட்ட திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கம் கூகுள் பிளஸ்  2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.   இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner