சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மன்றத்தின் உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர்கள், மற்றும் நண்பர்களுடன் சீவீsலீuஸீ கிஸ்மீ 5-இல் அமைந்திருக்கும் ஷிக்ஷீமீமீ ழிணீக்ஷீணீஹ்ணீஸீணீ விவீssவீஷீஸீ முதியோர் இல்லத்திற்கு செப்டம்பர் 29ஆ-ம் தேதி சென்று இருந்தார்கள். அங்கிருக்கும் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி, சிறிதுநேரம் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுக்கு தேவையான பால், மாவு, சீனி, பிஸ்கட், மைலோ, ஓட்ஸ் மற்றும் சில மளிகைப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். தோழர்கள் கலைச்செல்வன், மலையரசி, மாறன், கவிதா, தமிழ்ச்செல்வி, ராஜராஜன், கலியபெருமாள், பூபாலன் முதலியோர் உள்ளனர்.