எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விளாதிவாஸ்டாக், செப்.14 பிரிட் டனில் முன்னாள் ரசிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் 2 ரசியர்கள் படைத் துறையைச் சேர்ந்தவர்களோ, குற்றவாளி களோ அல்ல என்று ரசிய அதிபர் விளாதிமீர் புதின் புதன் கிழமை கூறினார்.

இதுகுறித்து அந்த நாட்டின் விளாதி வாஸ்டாக் நகரில், ஜப்பான் பிரதமர் சின்சோ  அபே, சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோருடன் பங்கேற்ற வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது:

பிரிட்டனில், முன்னாள் ரசிய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் இரு ரசியர்கள் யார் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். அவர்கள் இருவரும், பிரிட்டன் கூறியதைப் போல ரசிய உளவு அமைப்பில் பணியாற்றுபவர்கள் கிடையாது. அவர்கள் சாதாரண பொதுமக்களே ஆவர்.

அவர்களில் யாரும் குற்றவாளிகள் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். இந்த உண்மை விரைவில் வெளிவரும். பிரிட்டனின் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் அந்த இருவரும், செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner