எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஆக. 9- இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் ஓர் அணி யிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் எதி ரணியுமாக மோதிக்கொண்டன. அப்போது, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது எதிர் பாராவிதமாக ஜப்பான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்தனர்.

இதனால்  ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோசிமா நகரில் ஆகஸ்டு 6-ஆம் தேதி அமெரிக்க போர் விமானம் அணுகுண்டு வீசி அந்நகரை நிர்மூலமாக்கியது.

அணுகுண்டின் கதிர்வீச்சில் உடனடியாக ஆயிரக்கணக்கா னோரும் அந்த ஆண்டின் இறு திக்குள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேரும் உயிரிழந்தனர். மனிதகுலத்துக்கு எதிரான இரக்கமற்ற அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஹிரோசிமா நகரில் நடைபெற்றது.

இதில் ஹிரோசிமா மேயர் கசுமி மட்சுய், ஜப்பான் பிரத மர் சின்சோ அபே, அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பி உயிர்பிழைத்தோர் உள்ளிட்ட அய்ம்பதாயிரம்பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner