எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

டாக்கா, ஆக. 9- வங்கதேசத்தில் விபத்துகளால் உயிரிழப்பு களை ஏற்படுத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக் கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை திங்கள் கிழமை ஒப்புதல் வழங்கியது.

சாலைப் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி மாண வர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் எதிரொலி யாக இந்தச் சட்டம் இயற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத் தலைநகரான டாக்காவில், பயணிகளை ஏற் றிச் செல்வதற்காக பேருந்து கள் ஒன்றையொன்று போட்டி யிட்டு முந்திச் செல்வது வழக் கம்.

இந்த நிலையில், கடந்த வாரம் இதேபோல் மற்றொரு பேருந்துடன் போட்டியிட்டு தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையோரம் நின்றிருந்தவர் கள் மீது மோதியது.

இதில் ஒரு பெண் உள்பட இரு இளம் மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பேருந்தை போட்டி போட்டு ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நாட்டில் அடிக்கடி நடந்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமை யாக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாக்கா வில் மாணவர்கள் கடந்த 9 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரின் பல பகுதிகளில் அவர்கள் நடத்திய முற்று கைப் போராட்டத்தினால், அந்தப் பகுதிகள் முடங்கின. போராட்டத்தை ஒடுக்க இணைய தளத்தை முடக்கு தல் போன்ற பல்வேறு நட வடிக்கைகளை அரசு மேற் கொண்டாலும், மாணவர் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், போராட் டம் ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்து, காவல்துறையின ருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட் டது.

காவல்துறையினர் நடத் திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சிலும், தடியடியிலும் பலர் காயமடைந்தனர். எனி னும், மாணவர் போராட்டம் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மாணவர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, சாலை விதிச் சட்டம் 2018’ என்ற சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர வைச் செயலர் ஷஃபியுல் ஆலம் கூறியதாவது:

சாலை விதிச் சட்டம் 2018 என்ற புதிய சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தி யவர்களுக்கு இதுவரை வழங் கப்பட்டு வந்த 3 ஆண்டு சிறைத் தண்டனை, 5 ஆண் டுகளாக அதிகரிக்கப்படுகிறது என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner