எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 11- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியை விட்டு விலகினார்.

இதுகுறித்து அவர் பிரதம ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அய்ரோப்பிய யூனியனிலி ருந்து வெளியேறும் நடவடிக் கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்கிறது.

பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன் களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை விட்டு விலகுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அய்ரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்று மதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகிய வற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது.

மிதமான பிரெக்ஸிட்’ என் றழைக்கப்படும் இதுபோன்ற கொள்கைகளுக்கு பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலை யில், அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தெரசா மே தலைமையிலான அரசை கவிழ்க்கப் போவதில்லை என் றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டேவிட் டேவிஸின் பதவி விலகல் கடி தத்தை பிரதமர் தெரசா மே ஏற் றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், புதிய பிரெக்ஸிட் அமைச்சரின் பெயரை அவர் விரைவில் வெளியிடுவார் என் றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அய்ரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்ட மைப்பான அய்ரோப்பிய யூனி யனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

எனினும், அய்ரோப்பியா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் அய்ரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறை யாண்மையையும் இழந்துவிட் டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், அய்ரோப் பிய யூனியனில் இருந்து பிரிட் டன் வெளியேறுவது தொடர் பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அய் ரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner