எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாஸ்கோ, ஜூன் 12- சிரியா விவகாரத்தால் அமெரிக்கா -- ரஷ்யா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட் டில் ரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசா யன தாக்குதலால் ரஷ்யா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட் டினால் மிகப் பெரியதாக வெடித்தது.

இதுதவிர, அமெரிக்கா -- ரஷ்யா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவ தற்காக இருநாட்டு தலைவர்க ளும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருது கின்றனர். ரஷ்யாவுக்கும் மேற் கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்று மையை ஏற்படுத்துவதில் ஆஸ் திரியா நாட்டு பிரதமர் செபாஸ் டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

இந்நிலையில், ரஷ்ய அதி பர் விளாடிமிர் புதின் - அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக் கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்தி ரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷ்ய அதி பரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் குறிப் பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் புடன் முன்னர் புதின் தொலை பேசியில் பேசியபோது இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்ட தாகவும், சந்திப்பு நடைபெறும் தேதியை மட்டும் இரு அதிபர் களும் உறுதிப்படுத்த வேண்டி யுள்ளது என சீனாவில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த டிமிர்ட்டி பெஸ்கோவ் தெரிவித் துள்ளார்.

அமெரிக்கா பேச்சுவார்த்தைக் கான தேதியை குறிப்பிட் டால் எனது அலுவல்களை பொறுத்து டிரம்ப்பை சந்தித்துப் பேச நான் தயாராகவே இருக்கிறேன் என சீனாவில் நேற்று செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த புதி னும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner