எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், மே 16 லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தோழர்கள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் அரசியல் அறம் சொற்பொழிவு  (12.5.2018) அன்று லண்டனில் நடந்தது. ஒன்று கூடலின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் தங்கள் இன்னுயிரை கொடை யாக ஈகிய களப்போராளிகளுக்கும், இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் மரியாதை செலுத்தும் நோக் கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்க, வீர முழக் கங்கள் முழங்க, அகவணக்கம் செலுத்தப் பட்டது.

வரவேற்புரை முடிந்தவுடன் பேராசிரி யரின் அரசியல் அறம் சொற்பொழிவு தொடங்கி விட்டது.   ஒன்றே கால் மணி நேரம் அமைதியாக இருந்து மக்கள் சொற் பொழிவை கேட்டனர். பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் சொற்பொழிவு முடிந்தவுடன், கைத்தட்ட லில் அரங்கம் அதிர்ந்தது.

பிறகு பேராசிரியருடன் கேள்வி நேரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு தோழர்கள் ஏராளமான புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அனைத்து தோழர் களுக்கும் அறிவின் குறியீடாக பேனா ஒன்றை பரிசளித்தார். நன்றியுரையுடன் ஒன்று கூடல் இனிதே முடிந்தது.

ஒன்று கூடலில், வந்திருந்த பொது மக்களிடம், மக்களின் மனோ நிலையை அறிந்து கொள்ள, அவர்களின் சமூக அரசியல் புரிதலை புரிந்து கொள்ள, அறிவியல் மனப்பான்மையுடன் தயாரிக் கப்பட்ட வினா வங்கியை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

பொது மக்களுக்கு, பார்ப்பனிய சமஸ்கிருத கலாச்சாரம் தமிழ் மக்களை எப்படி அழிக்கிறது இழிவு படுத்துகிறது எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறப்பு முதல் இறப்பு வரை எங்கெங்கே? எப்படி? இழிவு செய்கிறது சமஸ்கிருத கலாச்சாரம், என்பதை விளக்கும் வகையில், சமஸ் கிருத ஸ்லோகங்கள் துண்டறிக்கையாக விநியோகிக்கப்பட்டன.

உலகத் தமிழர் எங்கிருந்தும் சொற் பொழிவை காணும் பொருட்டு, முகநூலில் நேரலை செய்யப்பட்டது. சொற் பொழிவின்  முழுக் காணொ லியை இங்கே காணலாம்: https://www.facebook.com/PASCLondon/videos/207248 1602970495 அரங்கு நிறைந்த ஒன்று கூடல், ஒன்றைப் புரிய வைத்தது. லண் டனில் ஊர் கூடி இழுத்தது பகுத்தறிவுத் தேரை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner