எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோலாலம்பூர், மே 16- கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம் பிய மஹாதிர் முகமது மலேசி யாவின் பிரதமராக பதவியேற் றுக்கொண்டார்.

இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள் ளார். இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை டோக்கியோவில் நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மஹாதிர் முகமது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே மலேசிய பிரதமராக பதவி வகிப்பேன். பிரதமர் பதவியை விட்டு கீழே இறங்கினாலும், மலேசிய அர சின் பின்னல் இருந்து முக்கிய பங்காற்றுவேன் என தெரிவித் தார்.

மேலும், தான் பிரதமராக தொடர்ந்தாலும், விரைவில் சிறையிலிருந்து வெளிவர உள்ள அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் தலைவராக தொடர் வார் என அவர் தெரிவித்து உள்ளார். தனது தேர்தல் பிரச் சாரத்தின் போது, அன்வர் இப் ராஹிம் சிறையிலிருந்து விடு விக்கப்பட்டு பிரதமராக்கப்படு வார் என மஹாதிர் கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது. அன்வர் இப்ராஹிமின் மனைவி தற் போது மலேசியா துணைப் பிரதமராக உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner