எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், மே 16- கொரியப்போ ருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் 27-ஆம் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொ ரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன் ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இரு தலைவர்களும் சந்தித் துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிர தேசமாக ஆக்குவதற்கு வட கொரியா எடுக்கிற முக்கிய நட வடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்பு களை செய்வதற்கு உறுதி எடுத் துக்கொண்டு உள்ளன என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப் படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட் டனர்.

இந்த நிலையில், பன்முன் ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென் கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கொரியப்போரை அதி காரப்பூர்வமாகவும், முறைப் படியும் முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும், கொரிய தீப கற்ப பகுதியில் அணு ஆயுதங் களை முழுமையாக கைவிடு வது பற்றியும் விவாதித்து முக் கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொ ரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த் தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற் றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உற வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொ ரியா ரத்து செய்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner