எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாஷிங்டன், ஏப். 16- அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோ ருடன் காரில் ஒரேகான் மாகா ணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார் கள். ஆனால் அவர்கள் வழி யில் காணாமல் போனார்கள்.

6ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற் றில் அடித்துச் செல்லப்பட்ட தாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப் பட்டது.

இப்போது கலிபோர்னி யாவை சேர்ந்த மீட்பு படை யினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல் லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ஆம் தேதி கைப்பற்றி உள்ளனர்.

மேலும் சந்தீப் குடும்பத்தி னருக்கு சொந்தமான பொருட் களும், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.

அந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து காவல் படையி னர் கூறினர்.

அதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படு கிற சந்தீப் குடும்பத்தினருடை யதுதான் என அவர்கள் உறுதி செய்தனர்.

சந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என் றும், 15 ஆண்டுகளுக்கு முன் பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல் கள் வெளியாகியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner