எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சியோல், மார்ச் 13  வட கொரிய அதிபருடனான பேச்சுவார்த் தையின் போது அமெரிக்க தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏ-வின் இயக்குநர் மைக் போம்பியோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவின் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பரிசோதனையில் ஈடுபட்டு வந்த வட கொரியாவுக்கு, பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால்தான் தற்போது அந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளார்.

பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதார வீழ்ச்சி அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக் காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் ஜோங்-உன் நிர்பந்திக்கப் பட்டுள்ளார். எனவே, அவருடனான பேச்சுவார்த்தையின்போது அமெ ரிக்கா எந்த நிலைப்பாட்டையும் விட்டுக்கொடுத்து அவருக்கு சலுகைகள் அளிக்காது.

அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் தலைவர்களான அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், கிம் ஜோங்கும் தற்போதுதான் முதல் முறையாக சந்தித்துப் பேசவிருக்கிறார்கள்.

எனவே, அவர்களிடையே ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்கள் எவையெவை என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வெறும் வெளித் தோற்றத்துக்காக மட்டும் டொனால்ட் டிரம்பப் முடிவுகளை எடுப்பதில்லை. பிரச்சினை களுக்கு உண்மையான தீர்வை எட்டும் நோக்கில்தான் அவர் ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறார்.

அவருக்கு மிகச் சரியான தகவல்களைக் கொண்டு சேர்க்கும் முக்கியப் பொறுப்பில் சிஅய்ஏ அமைப்பு உள்ளது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner