எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிங்கப்பூர் மார்ச் 12 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி கொலையாளி களை நானும், பிரியங்காவும் மன்னித்து விட்டோம், என கூறியுள்ளார்.     சிங்கப்பூரில் முன்னாள் அய்அய்எம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், உங்களுடைய தந்தை யின் கொலையாளிகளை மனித்துவிட் டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துப் பேசுகையில், எங்கள் தந்தையார் கொலை யால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந் தோம், காயம் அடைந்தோம்.  பல ஆண்டுகளாக கோபத்துடன் இருந்தோம். இருப்பினும், எப்படியோ நாங்கள் கொலை யாளிகளை முற்றிலுமாக மன்னித்து விட்டோம், உண்மையாக நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம், எனக் கூறினார். மேலும் அவர் பேசுகையில், என்னுடைய தந்தை இறக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். என்னுடைய பாட்டியும் இறக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அரசியலில் தவறான படைகளுடன் நீங்கள் குழப்பம் கொள்ளும் போதும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் உறுதியாக போராடும் போது நீங்கள் உயிரிழக்க நேரிடும். அது மிகவும் தெளி வானது. என்னுடைய பாட்டியும் இறக்கப் போகிறேன் என கூறினார், என்னுடைய தந்தையும் இறக்கப்போகிறேன், எனக் கூறினார்.

முன்னாள் பிரதமர்களின் பேரனாகவும், மகனாகவும் உங்களுடைய சிறப்பு உரிமையை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய ராகுல் காந்தி, என்னுடைய பாட்டி படுகொலை செய்யப்பட்ட போது எனக்கு வயது 14 ஆகும். பதின்ம வயதில் என்னுடைய பாட்டியை கொன்றவர்களுடன் நான் பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம். என்னுடைய தந்தையும் கொலை செய்யப்பட்ட பின்னர் என்னுடைய வாழும் சூழலே மாறிவிட்டது. காலை தொடங்கி இரவு வரையில் என்னை சுற்றிலும் 15 பாதுகாவலர்கள் இருந்தார்கள். 24 மணி நேரமும் 15 பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனை எதிர்க் கொள்வது என்பது மிகவும் கடினமானது, என கூறியுள்ளார். ராகுல் காந்தி பேசும் வீடியோ, காங்கிரஸ் கட்சியால் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபா கரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது இரு விஷயங்களை நான் உணர்ந்தேன். ஒன்று இலங்கை ராணுவத் தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள் ளனர் என்று, மற்றொன்று இதை நான் மிகவும் மோசமானதாக உணர்ந்தேன், அவ ருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். வன்முறையை தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன் என்று கூறினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இக்கருத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner