எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டோக்கியோ, பிப். 13 புதுச்சேரி  பேராசிரியர் முனை வர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றச்செய லாளர் பொறுப்பு வகித்து வருகிறார். பன்னாட்டளவில் தொல்காப்பிய மன்றங்கள் நிறுவி தமிழ்நெறி பரப்பும் பணிகளை செய்து வருகிறார்.

ஜப்பான் நாட்டில் ஜப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, டோக்கியோ நகரில் கொமாட் சுகவா சகுரா அரங்கில் 3.2.2018 அன்று நடைபெற்றது.

அய்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வு களுக்கும் கலை நிகழ்வுகளுக் கும் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

அண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத் தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேரா சிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்குரைஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

விழாவில் தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல் காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச் சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத் தின்  'ஜப்பானியக் கிளை ' தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப் பட்டது.

பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பணிகளைப் பாராட்டி ஜப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா.பாலமுருகன் ‘தொல்காப்பியக் காவலர்’ விருதை பேராசிரியர் மு.இளங் கோவனுக்கு வழங்கினார்.

ஜப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியிடப் பட்டது. முதல் படியைச் ஜப் பான் தமிழ்ச்சங்கத்தின் நிறு வனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.

ஜப்பான் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு.கலைவாணன் உள்ளிட்ட வர்கள் விருதுபெற்ற பேராசிரி யர் மு.இளங்கோவனுக்கு பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத் தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சி களைக் கண்டுகளித்தனர்.

ஜப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழு வினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கினார்.

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையு றைப் பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner