எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாஸ்கோ, பிப். 13- ரஷ்ய தலை நகர் மாஸ்கோவின் டோமோடி டோவோ விமான நிலையத்தில் இருந்து ஒர்ஸ்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம் ஒன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே மாஸ் கோவுக்கு அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பயணிகள் மற் றும் ஊழியர்கள் என விமானத் தில் இருந்த 71 பேரும் உயி ரிழந்தனர்.

இந்த விபத்து மீட்பு பணி களுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்க ளும் ஈடுபடுத்தப்பட்டு உள் ளன. சம்பவ இடத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்பு பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத படி கருகி உள்ளன. எனவே மரபணு சோதனை மூலமே அடையாளம் காண முடியும் எனவும், இதற்கு 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்றும் ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் மாக்சிம் சோகோலோவ் கூறி னார்.

விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் தொடங்கி உள்ளது. இதை மேற்கொண்டு வரும் விசாரணைக்குழுவினர், தொழில்நுட்ப கோளாறு, மனித தவறு மற்றும் மோசமான வானிலை போன்றவற்றின் அடிப்படையில் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். எனினும் பயங்கரவாத சதிச் செயல் குறித்த பின்னணியில் விசாரணை மேற்கொள்ளப் படுமா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner