எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஇசுலாமாபாத், பிப். 13- பாகிஸ் தான் நாட்டின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் அஸ்மா ஜெகாங்கீர்  நேற்று மரணம டைந்தார். 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக மரண மடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத் தவர் அஸ்மா ஜெகாங்கீர். மிகச்சிறந்த வழக்குரைஞரான இவர் மனித உரிமைகளுக்காக போராடி வந்தார். இவர் பாகிஸ் தான் மனித உரிமைகள் ஆணை யத்தின் தலைவர், உச்ச நீதி மன்ற பார் அசோசியேசனின் தலைவர் என முக்கிய பொறுப் புகளை வகித்து வந்தார். மக் களுக்கு அனைத்து உரிமைக ளும் கிடைக்க போராடினார். அதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவரது மரணத்திற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தா னின் சமூக ஆர்வலர் மலாலா, அஸ்மா மரணம் அனைவருக் கும் மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner