எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், டிச. 7- ஜெருசலேமை தலைநகராக இசுரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரண்டு நாடுகளும் சொந்தம் கொண் டாடி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது ஜெருசலேமில் அமெ ரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அதற்கான நட வடிக்கைகளை கடந்த வாரம் டிரம்ப் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு களையும் மீறி ஜெருசலேமை இசுரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து டிரம்ப் நேற்று உத் தரவு வெளியிட்டார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெ ரிக்க தூதரகத்தை ஜெருசலே மிற்கு மாற்றவும் டிரம்ப் உத் தரவிட்டார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு கத்தார், ஜெர்மனி, ஈரான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அய்.நா. சபை மற்றும் அய் ரோப்பிய யூனியனும் அமெரிக் காவின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  இந்நிலை யில், ஜெருசலேம் பிரச்சினை குறித்து அய்.நா.சபையில் உட னடியாக விவாதம் நடத்த வேண்டும் என பொலிவியா, எகிப்து, பிரான்சு, இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன், உருகுவே ஆகிய எட்டு நாடு கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளை அடுத்து ஜெருசலேம் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடுகிறது.

அதன்படி நாளை காலை சரியாக 10 மணிக்கு அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெருசலேம் பிரச் சினை குறித்து மட்டும்தான் விவாதிக்கப்படும் என டிசம்பர் மாதத்திற்கான அய்.நா. கவுன் சில் தலைமையான ஜப்பான் அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner