எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெய்ஜிங், டிச. 7- இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன நிதி அமைச்சர் வாங் யீ இந்தியா வருகை தரவுள்ளார்.

இந்தியா-, பூடான், -சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்காலாம் பகுதி விவகாரத் துக்குப் பிறகு, சீனாவிலிருந்து இந்தியா வரும் அரசுத்தரப்பு உயர் அதிகாரி வாங் யீ என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங் கேற்கும் மாநாடு டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஞ் ஷாங் கூறுகையில், ‘டில்லியில் நடைபெறவுள்ள 3 நாடுகள் பங்கேற்கும் 15-ஆவது வெளி யுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச் சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்‘ என்றார். டோக்காலாம் பகுதியில் சீன ராணுவம், சாலை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. அந்த முயற்சியை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர். இத னால், பதற்றமான சூழல் நிலவி வந்தது. சுமார் 73 நாள்கள் நீடித்த இந்தப் பதற்றம், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: விளாடிமிர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ, டிச. 7- ரஷ்யா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின் (65) கடந்த 2012ஆ-ம் ஆண்டு நடை பெற்ற அதிபர் தேர்தலில் போட் டியிட்டு வெற்றி பெற்றார். அவ ரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவ டையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவ தாக நேற்று அறிவித்துள்ளார்.

வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் நேற்று காலை உரையாற்றியபோது தனது விருப்பத்தை அவர் வெளியிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று அதிபரா னால் வரும் 2024-ஆம் ஆண்டுவரை நீடிக்கும் புதினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என தெரிகிறது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner