எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், அக்.12  வடகொரியா வின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் விதமாக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் இரவு நேரத்தில் பறந்து அதிரடியாக ஒத்திகையில் ஈடுபட்டன.  அப்பகுதியில் இதனால் போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

வடகொரியாவின் தலைவராக உள்ள கிம் ஜாங் அன், முதலில் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை அச்சுறுத்தும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்தினார்.

தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் விதமாக வடகொரியாவை அமெரிக்கா கண்டித்தது. இதைத் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு சோதனை களை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியது.

இதனால் அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியாவுக்கு விதித்தது. அதைப் பொருட்படுத் தாமல் கிம் ஜாங் அன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 22 ஏவுகணை சோதனைகளை நடத்தினார்.

இதில் அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் விதமாக நடத்தப்பட்ட ஏவுகணை சோத னையும் ஒன்றாகும்.

இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாக பறந்து சென்று கடலில் விழுந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிர்ச்சி அடைந் தார்.

இதுபற்றி அண்மையில் அவர் கூறும்போது வடகொரி யாவுடன் தூதரக பேச்சுவார்த்தை நடத்துவதெல்லாம் பலன் தராது. அந்த நாட்டை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்றால் ஒன்றே ஒன்றால் மட்டும்தான் முடியும் என்று போர் தொடுப்பது குறித்து மறைமுகமாக குறிப்பிட்டார்.

இதன் எதிரொலியாக வட கொரியா மேலும் சில ஏவுகணை சோதனைகளை கொரிய தீபகற்ப பகுதியில் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா தனது குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் ராணுவ விமான தளத்தில் இருந்து பி1பி லான்சர் என்னும் அதிநவீன பிரமாண்ட போர் விமானங்கள் இரண்டை கொரிய தீபகற்ப பகுதிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.
இவை கொரிய தீப கற்பத்துக்குள் நுழைந்ததும், தென்கொரிய ராணுவத்தின் எப்15 கே என்னும் 2 போர் விமானங் களுடன் இணைந்து கொண்டன. இந்த 4 விமானங்களும் நேற்று முன்தினம் இரவே பறந்து அதிரடியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

முதல் ஒத்திகை தென்கொரியா வின் கிழக்கு பகுதியில் நடத் தப்பட்டது. அப்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டும், வான்வழியில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சரமாரி யாக வீசி சோதனை நடத்தின. 2ஆவது ஒத்திகை தென் கொரியா வின் தெற்கு பகுதி மற்றும் சீனாவுக்கு இடையேயான கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் முன் பை விட தீவிரம் அடைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner