எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாண்டா ரோசா, அக்.11 கலி போர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயில் சிக்கி 17 பேர் பலியானார்கள். 100 பேர் பலத்த காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தின் வடபகுதி யில் உள்ள வைன், நாபா, சோ னோமா, யூபா, ஆரஞ்சு ஆகிய மாவட்டங்கள் மலைப் பிரதே சங்களில் அமைந்தவை. இங் குள்ள ஒரு காட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென தீ பிடித்துக் கொண்டது. அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்த பல நகரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது.

குறிப்பாக கலிபோர்னியா வின் வைன், நாபா, சோனாமோ, யூபா, ஆரஞ்சு உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 200 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு தீ பர வியது. சோனோமா மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கும் மிகப்பெரிய நகரான சாண்டா ரோசா நகருக்கும் தீ பரவியது.

இதில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த நகரில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடங் களுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

17 பேர் பலி

சாண்டா ரோசா நகரில் மட்டும் 1,500க்கும் மேலான வீடுகள், வணிக மய்யங்கள், மளிகை கடைகள், சுற்றுலா விடுதிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

நாபா மாவட்டத்தில் சில்வ ராடோ என்னும் சுற்றுலா விடு தியும், சாண்டா ரோசா நகரில் ஹில்டன் என்னும் ஓட்டலும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. சோனோமா மாவட்டத்தில் 12-க் கும் மேற்பட்ட ஒயின் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் சேதம் அடைந்தன. இந்த காட்டுத் தீயில் சிக்கி 17 பேர் பலியாகி விட்டனர். 100 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் வரவழைக்கப் பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

காட்டுத் தீ பரவி வரும் மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்து எத னால் ஏற்பட்டது என்பது உடன டியாக தெரிய வரவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner