எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டியில் பங்குபெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்

சிங்கப்பூர், செப். 12- "தமிழ்மொழிப் போட்டிகள் 2017" சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளி 4ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி 1ஆம் மற்றும்  2ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழ் வாசிப்புப் போட்டியில் பங்குபெற்ற உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் "பெரியார் பொன் மொழிகளை" சிறப்பாக வாசித்தார்கள். மாணவர்களின் உச்சரிப்பு, உடல்மொழி வெளிப்பாடு ஆகியவைகளுக்கு ஏற்ப நடுவர்கள் மதிப் பெண் அளித்தார்கள். மேலும் நடுவர்கள் மாணவர்களிடம் அவர்கள் வாசித்த பெரியார்பொன்மொழிகளிலிருந்து ஒரு பொன்மொழிக்கு கருத்து கூறச் சொல்லி கேட்டனர். அப்போது மாணவர்கள் யோசித்து அவர்களின் சிந்தனை யோட்டத்தில் அந்த பொன்மொழிக்கு சரியாக பதில் அளித்தது அருமையாக இருந்தது. ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ், கு.மலையரசி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள்.

தமிழ் வாசிப்புப் போட்டியில் வெற்றிபெற்ற  5 வெற்றியாளர்களின் பெயர் களை நடுவர்கள் அறிவிக்கும் போது, "இந்தப் போட்டியின் நோக்கம் பரிசல்ல, போட்டியின் முடிவில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டு போகிறீர்கள் என்பது தான் முக்கியம்" என்று மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார் ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ்.

ஓவியப் போட்டியில் பங்குபெற்ற தொடக்கநிலை மாண வர்கள் அழகான ஓவியங்களை வரைந்தார்கள். இந்திய மரபுடமை நிலையம், சிங்கப்பூர் நாடாளுமன்ற மாளிகை, கரையோரப் பூங்கா, செந்தோசா, மரீனா பேசாண்ட்ஸ், சிங்கப்பூர் ராட்டினம் என்று தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்ட சிங்கப்பூரின் ஏழு காட்சிகளில் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் அழகான ஒவியங்களாக வரைந்தார்கள். அதன் பெயரை தமிழில் எழுதினார்கள். நடுவர்கள் அதில் சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுத்து 5 வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்தார்கள். பி.மதியழகன், ஆசிரியர் எம்.சுகந்தி,  ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள்.

ஓவியப்போட்டி,  மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறார்கள் ச.இரத்தினக்குமார், தெ.மதியரசன், வீ.கலைச்செல்வம்

இப்போட்டிகளில் கலந்துகொண்ட 52 மாணவர் களுக்கும் பங்குபெற்றதற் கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகள் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பெரியார் விழாவில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பெரியார் சமூகசேவை மன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களை பாராட்டி பேசும் போது பெரியாரைப் பற்றி பாரதி தாசன் எழுதிய "தொண்டு செய்து பழுத்த பழும்...." கவிதையை நினைவு கூர்ந்து பேசினார். நிகழ்ச்சியில் மன்றத்தின் புரவலர் ச.இரத்தினக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியை மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் ஒருங்கிணைத்தார். பிள்ளைகளுடன் அவர்களின் பெற்றோர்களும் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் மன்றத்தின் துணைத் தலைவர் தெ.மதியரசன், பொருளாளர் நா.மாறன், இராஜராஜன், தமிழ் மொழி போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் இராமன், தமிழ்ச்செல்வி, கவிதா மாறன், சவுந்தர், பழனி, பர்வீன்பானு, பெரியார் பிஞ்சு ஆதவன், இனிய நிலா, கல்லூரி மாணவர்கள் வானதி, வளவன், ராஜராஜன் ராஜமகேந்திரன், செந்துறை மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருந்தார்கள்.

- செய்தி: ராஜராஜன் ராஜமகேந்திரன், சிங்கப்பூர்

பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி

விழாக்குழு: இடமிருந்து வலம்: பர்வீன் பானு, க.பூபாலன், சவுந்தர், ராமன், பழனி, ரா.ராஜராஜன், மாறன், தெ.மதியரசன்,
கலைச்செல்வம், மலையரசி, தமிழ்ச்செல்வி, கவிதா மாறன், இனிய நிலா, வானதி, ராஜராஜன்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner